ஐ.ஜி.முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கை தெலுங்கானாவுக்கு மாற்றியதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் மனுவை வரும் 23ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொள்கிறது.
ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கை தெலுங்கானாவுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பெண் காவல்துறை கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐ.ஜி.முருகன் மீது கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் புகார் அளிக்கப்பட்டது.
2018ல் லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த ஐ.ஜி. முருகன், தன்னுடன் பணிபுரிந்த பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக இருந்ததால் முருகன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்போதைய அதிமுக அரசு மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விசாரணை நடந்தால் தனக்கு நீதி கிடைக்காது என்று பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி முறையிட்டிருந்தார்.
செல்வாக்கான பதவியில் இருந்த ஐ.ஜி முருகன் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்றும் பெண் எஸ்.பி குற்றம் சாட்டியிருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யின் கோரிக்கையை ஏற்று வழக்கை தெலுங்கானாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியிருந்தது.
அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை முருகன் விசாரித்து வந்தார்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் வழக்கை தமிழ்நாட்டிலேயே நடத்த அரசு கோரிக்கை விடுத்துள்ளது