chennireporters.com

பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டருக்கு 18 லட்சம் ரூபாய் அபராதம்.

தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்ட்டராக இருந்த ரத்தின்குமார் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்தபோது ஒரு கொலை வழக்கில் ராஜா முகமது , மனோகரன் ஆகிய இருவர் மீது பொய் வழக்கு போட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த வழக்கு பொய் வழக்கு என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது .

அதனால் பாதிக்கப்பட்ட இருவரும் மதுரை உயர் நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராஜா முகமது என்பவருக்கு ரூபாய் 10லட்சமும் மனோகரன் என்பவருக்கு ரூபாய் 8லட்சமும் இன்ஸ்பெக்ட்டர் ரத்தினகுமார் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளது.

இதனால் மேற்படி ரத்தினகுமார் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனலில் பணிபுரிந்த போது இதுபோல பல பொய் வழக்கு போட்டு அப்பாவி மக்களை சிறையில் அடைந்துள்ளார்.

இவர் மீது மாநில மனித உரிமை ஆணையத்தில் 4வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளது.  மேலும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்களை தனது முகநூல் பக்கத்தில் மிகவும் மோசமாக விமர்சனம் செய்தது குறித்து நான் கொடுத்த புகாரில் விரைவில் வழக்கு பதிவு செய்து அவர் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் பல்வேறு முறைகேடுகளை செய்த இவர் மீது CBI விசாரணை நடத்தவேண்டும்.
என்று தர்மபுரியை சேர்ந்த முன்னாள் அரசு வழக்கறிஞர்  இரா.கருணாநிதி என்பவர் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க.!