chennireporters.com

தாலுக்கா ஆபீசில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி. மூடி மறைக்கும் அதிகாரிகள்.

கடிதம் எழுதி வைத்துவிட்டு தாலுக்கா ஆபிசில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி;

இதற்கு காரணமான வி.ஏ.ஒ,   ஆர்.ஐ,   தாசில்தார்,   ஆர்.டி.ஓ ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இறந்து போன முதியவரின் உறவினர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

 

இதனால் திருத்தணி திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வெட்டு கொடிக்கம்பத்தில் முதியவர் பெரியசாமி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் இறப்பதற்கு முன்பு கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

அதில் பெரியசாமியின் சமூகத்தைச் சார்ந்த நபர்களுக்கு 3000 பேருக்கு கடந்த 40 ஆண்டு காலமாக சாதி சான்றிதழ் வழங்கவில்லை.

இதனால் பிள்ளைகள் படிப்பு, வேலை வாய்ப்பு, அனைத்தும் பறிபோகிறது, என்று மனக்குமுறலை கடிதமாக எழுதி வைத்துள்ளார்.

கடிதத்தை கைப்பற்றிய போலீஸ் முதியவர் பெரியசாமி பிரேதத்தை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பெரிய சுவாமியின் உறவினர்கள் மற்றும் அவரது ஊர்காரர்கள் சாதி சங்கத்தைச் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து திருத்தணி அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

இவர்கள் அனைவரும் அங்கிருந்து பெரிய சுவாமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தவாறு ஊர்வலமாக ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நடந்து வந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள, சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்தும் பெரிய சுவாமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கோரிக்கை வைத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 40 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதன் பின்பு அந்த இடத்தில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட வைத்தார்.

பின்னர் அனைவரும் ஊர்வலமாக ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குச் சென்றனர்.

அந்த இடத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆர்.டி.ஓ முன்பு பெரியசாமியின் உறவினர்கள் எங்கள் மக்களுக்கு கடந்த 40 ஆண்டு காலமாக சாதி சான்றிதழ் வழங்கவில்லை.

தொடர் போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டோம் மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகள் இடத்தில் எங்கள் நிலைமையை எடுத்து கூறிவிட்டோம்.

எங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குங்கள் இல்லை என்றால் காரணத்தை கூறுங்கள், அதை விடுத்து எங்களை அலைய வைக்க வேண்டாம் நாங்கள் வாழ்வதா சாவதா என்று முடிவு உங்கள் கைகளில் தான் உள்ளது.

 

பெரியசாமி மரணத்திற்கு காரணமான சாதி சான்றிதழ் வழங்காமல் அவமதிப்பு செய்த பள்ளிப்பட்டு வட்டாட்சியர், மற்றும் திருத்தணி முன்னாள் வருவாய் கோட்டாட்சியர் சத்யா, மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், ஆகியோர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், ஏனென்றால் இதற்கு முன்பு ஆறு மாதத்திற்கு முன்பு போராட்டத்திற்கு நடத்தியபோது இறந்து போன முதியவர் பெரியசாமி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடினார்.

ஆனால் வருவாய் துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


இவர்கள் இது தொடர்பாக முழு விவரத்தையும் மனுவாக வழங்கி பெரிய சுவாமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் நியாயம் வேண்டும் மேலும் தமிழக அரசு தலையிட்டு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக விசாரணை செய்வதாக வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அங்கிருந்து பெரியசாமியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

பெரிய சுவாமியின் பிரேதத்தை வாங்காமல் 5 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டதால் திருத்தணியில் தொடர் பதட்டம் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க.!