Chennai Reporters

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு மாறிய செய்தி வாசிப்பாளர்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் சின்னத்திரை வாய்ப்பு கிடைத்து கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் நடிகை பிரியா பவானி சங்கர். அதன்பின் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார் பிரியா பவானி.

பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், கசடதபற, ஹாஸ்டல் போன்ற படத்தில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் யானை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறார்.

இப்படத்தினை அடுத்து திருச்சிற்றம்பலம், அகிலன், பொம்மை, பத்து தல, இந்தியன் 2, குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் பிரியா பவானி சங்கரின் முதல் சம்பளம் ரூ. 360 என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அவரே கூறியிருந்தார்.

தற்போது சினிமாவில் இரண்டாம் தர நடிகை இடத்தினை பிடித்துள்ள பிரியா பவானி லட்சத்தில் சம்பளம் வாங்கி வருகிறார்.

ஏற்கனவே லட்சத்தில் சம்பளம் வாங்கும் நடிகை 20 கோடி மதிப்பிலான ஈசிஆர் பங்களாவை வாங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஒரு படத்திற்கு 20 லட்சம் மட்டுமே சம்பளமாக பெரும் இவர் எப்படி ஒரு பங்களா வாங்கும் அளவிற்கு கோடியில் புரண்டார் என்று பயில்வான் கூட கேட்டிருந்தார்.

தற்போது 2 கோடி மதிப்பிலான காரை சமீபத்தில் வாங்கியிருக்கிறாராம் பிரியா பவானி சங்கர்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!