chennireporters.com

சென்னை பள்ளிக்கரணை முத்தூட் நிறுவனத்தில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த பெண்ணை காப்பாற்றும் அதிமுக வி.ஐ.பி.

பிரத்தியேகமான செய்தி.

சென்னை மாநகர காவல் துறை தலை சுற்றி நிற்கிறது தனியார் நிறுவனத்தில் நகைகளை கொள்ளை அடித்த பெண்ணை கைது செய்ய முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறது காவல்துறை நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

சென்னை பள்ளிக்கரணையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அந்த நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்த அம்பிகா தேவி தனது ஆதரவாளர்களுடன் நாலு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைமறைவாக உள்ள அம்பிகா தேவி மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று கிளையின் மேலாளர் மணிகண்டன் கடந்த 4ம் தேதி அன்று தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் அவர்களை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தங்க நகைகளை அடமானம் வைத்த பொதுமக்களின் நகைகள் காணாமல் போனது ஆடிட்டிங் கில் கண்டு பிடிக்கப்பட்டது.

நகைகளை பாதுகாப்பாக வைக்கும் பாதுகாப்பு அறையில் கிளையின் துணை மேலாளர் அம்பிகா தேவி தனது ஆதரவாளருடன் உள்ளே புகுந்து 125 பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தங்கைகளை திருடி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் மதிப்பு சுமார் நாலு கோடி.  நகைகளை திருடிய அம்பிகா தேவி மற்றும் ரமேஷ், குமார் ,ராகுல், பிரசாந்த், தாமோதரன், கணேஷ்குமார் ,சண்முகம், சிவகுமார், பார்த்திபன் அவரது மனைவி ரம்யா சண்முகம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யவில்லை.  காரணம் நகைகளை திருடி அம்பிகா தேவியை கைது செய்ய கூடாது என்று முன்னாள் அதிமுக விஐபி ஒருவர் போலீசுக்கு நெருக்கடி தருகிறாராம்.

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் தனியார் நகைக்கடை நிறுவனத்தில் நடை பெற்ற கொள்ளையில் இதுவே பெரிய கொள்ளை என்கிறார்கள் காவல்துறையினர்.

வங்கியில் கொள்ளை போன நகைகளின் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் குறைத்து மதிப்பீடு செய்து புகார் அளிக்க வேண்டும் என்கிற காவல்துறையின் நெருக்கடியில் தான் குறைவாக நகைகள் கொள்ளை போனதாக புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இந்த செய்தி பொதுமக்களிடத்தில் பரவினால் முத்தூட் நிறுவனத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை யும் கடும் எதிர்ப்பு மன நிலை உருவாகிவிடும் என்பதால் ரகசியமாக வைத்து விசாரணை நடத்தி வருகிறதாம் காவல்துறை.

இதையும் படிங்க.!