chennireporters.com

பூந்தமல்லி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்.

பூந்தமல்லி சாா்- பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் 7 மணி நேரம் சோதனை நடத்தினா்.

பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே சாா்- பதிவாளா் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, அதிகாரிகள், ஊழியா்கள் லஞ்சம் பெறுவதாக ஆலந்தூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, புதன்கிழமை காலை 11.30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா், பூந்தமல்லி சாா்- பதிவாளா் அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து, உள்ளே இருந்தவா்களை வெளியேற விடாமல், அந்த அலுவலகத்தில் 7 மணி நேரம் சோதனை நடத்தினா்.

இதில், கணக்கில் வராத ரூ.30,000-ஐ போலீஸாா் கைப்பற்றினா். இதுதொடா்பாக, சாா்- பதிவாளா் உள்ளிட்ட ஊழியா்களிடம் தீவிர விசாரணை நடத்தினா். மேலும், அலுவலகத்தில் இருந்து பல்வேறு ஆவணங்களையும் போலீஸாா் கைப்பற்றி எடுத்துச் சென்றனா்.

 

 

பூந்தமல்லி சார்- பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் பட்டை என்கிற கார்த்திகேயன் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் தான் பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகத்தை ஆட்டிப் படைக்கும் அதிகார மையம் என்று சொல்கின்றனர் சில அலுவலக ஊழியர்கள்.

பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணத்திற்கு பூந்தமல்லியில் சில தொழிலதிபர்களிடமும் பில்டர் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் கார்த்திகேயன் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க.!