chennireporters.com

வேலுமணிக்கு ‘காப்பு’ உதவி செய்த 12 அதிகாரிகளும் கைதா? அலரும் ஐ.ஏ.எஸ் கூடாரம்.

 

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி மீது பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தது.

ஆனால் இதுவரை வேலுமணி கைது செய்யப்படவில்லை.

அவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதே தவிர அதன் பிறகு அவர் மீது எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் விரைவில் வேலுமணி கைது செய்யப்படலாம் என்றும் அவருக்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் கைது செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சிலர் நம்மிடம் தெரிவித்தனர்.

இதனால் ஜெயிலையே பார்க்காத ஐஏஎஸ் அதிகாரிகள் கதி கலங்கி உள்ளனர்.

தாங்களும் கைது செய்யப்படுவோம் என்கிற அச்சத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தில் கைது நடவடிக்கை கூடாது என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான ஊழல் புகாரில் வழக்கு பதிவு செய்து இரண்டு முறை அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது.

கந்தசாமி ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட பிறகு அதிமுக-வில் ஊழல் செய்த அமைச்சர்கள் அதிரடியாக கைது செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டும் நடத்தப்பட்டது.

ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களின் மீது எந்த நடவடிக்கையும் (கைது) இதுவரை எடுக்கப்படவில்லை .

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி ஊழல் செய்ய உதவியதாக சந்தேகப்படும் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கோரி முதல்வருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் எழுதியிருந்தது.

ஆனால் கடிதம் எழுதி 7 மாதங்கள் ஆன பிறகும் ஊழல் அதிகாரிகளை விசாரிக்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்னும் அனுமதி வழங்கவில்லை.

முதலமைச்சர் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

ஊழல் குற்றச்சாட்டில் உள்ள அதிகாரிகளை விசாரித்தால் தான் வேலுமணி மீதான ஊழல் புகாருக்கான ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அது உதவியாக இருக்கும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை கருதுகிறது.

அதனடிப்படையிலேயே அனுமதி கேட்டு முதல்வர் ஆபிசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

அறப்போர் இயக்குனர் ஜெயராம்

ஆனால் முதல்வர் இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் அளிக்காமல் கிடப்பில் போட்டு உள்ளதால் அறப்போர் இயக்கம் உள்ளிட்ட ஊழலுக்கு எதிரான இயக்கங்கள் திமுக அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளது.

 

வேலுமணி அமைச்சராக இருந்தபோது அவர் ஊழல் செய்ததற்கு உதவியாக இருந்த அதிகாரிகளின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

அதிகாரிகள் விபரம்:

கோவை மாநகராட்சியின் ஆணையராக இருந்த கே. விஜய கார்த்திகேயன் ஐஏஎஸ், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஊழல் நாயகன் பெண் பித்தர் ஜி.வி. பிரகாஷ் ஐஏஎஸ், உள்ளாட்சிப் பணிகள் சம்பந்தமான உத்தரவுகளை பிறப்பித்த ஐஏஎஸ் அதிகாரி கந்தசாமி, சுகாதாரத்துறையில் துணை ஆணையராக இருந்த மதுசூதன் ரெட்டி ஐஏஎஸ், கோவை மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் நந்தகுமார், சென்னை மாநகராட்சியின் நிர்வாக பொறியாளர் செந்தில்நாதன், கோவை மாநகராட்சி பொறியாளர் சரவணக்குமார், கோவை மாநகராட்சி துணைப் பொறியாளர் ரவிக்கண்ணன், கோவை மாநகராட்சியில் பணியாற்றிய அனிதா ஜோசப், சென்னை மாநகராட்சியில் முதன்மை பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற புகழேந்தி, சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற டாக்டர் செந்தில்நாதன் ஆகியோர் கொண்ட பட்டியல் வெளியாகி உள்ளது.

மதுசூதன் ரெட்டி

கே. விஜய கார்த்திகேயன் ஐஏஎஸ்,

பிரகாஷ் ஐஏஎஸ்,

கந்தசாமி ஐஏஎஸ்

நந்தகுமார்

எஸ்பி வேலுமணி மீதான ஊழல் புகார்களில் பல ஆதாரங்கள் சிக்கும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி கொடுத்ததும் ஊழல் செய்தவர்களும் ஊழலுக்கு உதவியாக இருந்தவர்களுக்கும் காப்பு மாற்றுவது நிச்சயம் என்கிறார்கள்.
உளவுத்துறை அதிகாரிகள் சிலர்.

தங்களை கைது செய்யக் கூடாது என்றும் தங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தில் முறையிட்டதாக கூறப்படுகிறது.

எந்த ஆட்சி வந்தாலும் அதிகாரிகள் எப்போதும் நடு நிலைமையோடு செயல்பட வேண்டும் நிலைமை கை மீறி போய்விட்டது
சங்கம் ஒன்றும் செய்ய முடியாது என்று ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கையை விரித்து விட்டதாக கூறப்படுகிறது.

எனவே எந்த நேரத்திலும் வேலுமணியும் அவருக்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க.!