லஞ்சம் வாங்கிக் கொண்டு போலியான ஆவணங்களை பதிவு செய்யும் பத்திரப்பதிவு அலுவலர் மல்லிகேஸ்வரி மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவடி அடுத்த தண்டுரை கிராமம் தந்தை பெரியார் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு அந்தப் பகுதியில் 11 சென்ட் நிலம் உள்ளது.
சண்முகம்
சர்வே நம்பர் 350/4 B மற்றும் 2A. இதன் மதிப்பு சுமார் 80 லட்சம் மேற்படி இடத்தை அதே பகுதியை சேர்ந்த விநாயகம் மகன் அமுலு என்பவரின் தம்பி சோமசுந்தரம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு சண்முகத்துக்கு சொந்தமான இடத்தை போலியான ஆவணங்கள் தயார் செய்து மேற்படி இடத்தை தனது பெயருக்கு ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டார்.
நிலத்தின் உரிமையாளர் சண்முகம் வராமலேயே ஆவடி பத்திரப்பதிவு அலுவலர் மல்லிகேஸ்வரி முறைகேடான ஆவணங்களை வைத்து பத்திரப் பதிவு செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சண்முகத்தின் மகன் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் மாவட்ட பதிவாளர் இடத்திலும் பத்திரப்பதிவு துறை தலைவருக்கும் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கும் மல்லிகேஸ்வரி மீது புகார் அளித்திருக்கிறார் .
பதிவாளர் மல்லிகேஸ்வரி.
அந்தப் புகார் குறித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட பத்திர பதிவு அலுவலர் சண்முகம் தரப்பிற்கு பதிலளித்துள்ளார் .இந்த நிலையில் மேற்படி இடத்தை சோமசுந்தரம் வேறு ஒருவருக்கு அந்த இடத்தை அடமான பத்திரம் போட்டுள்ளார். அது போலியான ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த இடம் என்று தெரிந்தும் அதே இடத்திற்கு மல்லிகேஸ்வரி மீண்டும் பணம் பெற்றுக் கொண்டு அடமான பத்திரத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக சண்முகம் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் சோமசுந்தரத்தின் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு எண் 126/ 2022 படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
பத்திரப்பதிவு துறை தலைவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று பார்த்துவிட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவிக்கிறார் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்.
ஆவடியில் ஹரே கிருஷ்ணா கோயிலுக்கு சொந்தமான இடத்தை லஞ்சம் வாங்கிக் கொண்டு ராஜசேகர் போலியான ஆவணத்தை வைத்து பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது பத்திரப்பதிவுத்துறை தலைவர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.