தமிழக அரசியலில் பா.ஜ.க பெரும் சதி செய்து அதிமுகவை உடைக்கும் என்று ஒரு வருடத்திற்கு முன்பே திருமாவளவன் சுட்டிக் காட்டியுள்ளார்.
அவர் பேசிய பல தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பாஜகவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் அது ஜெயலலிதா தலைமைக்கு பிறகு எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் தலைமையில் இருக்கும் அதிமுகவை எப்படி பாஜக தலைவர்கள் சிதைப்பார்கள் என்பதை முன்கூட்டியே கணித்து சொல்லியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவை கட்சி பேதம் இல்லாமல் பலரும் இந்த வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
நேற்று பொதுக்குழு நடந்தபோது போடப்பட்ட தீர்மானங்களும் அதன் பிறகு அதிமுக அலுவலகத்தை ஓ பன்னீர்செல்வம் கைப்பற்றியதும் எத்தகைய விளைவுகளை அதிமுக சந்தித்து இருக்கிறது என்பதை விளக்குகிறது இந்த வீடியோ.