குணச்சித்திர நடிகர் ராமராஜன் மரணம்.

July 12, 2022

By சை. சையத் ரிஸ்வான்

உடல்நலக் குறைவால் காலமானார்.

பாலா இயக்கத்தில் விஷால் ஆர்யா இணைந்து நடித்த அவன்-இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராமராஜன்.

இந்த படத்தில் யாரும் திருடக் கூடாது என்று கிடா வெட்டி விருந்து வைத்து சத்தியம் வாங்கும் எதார்த்தமான போலீஸ் அதிகாரியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.

தொடர்ந்து தகடு,  சவரிக்காடு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் ராமராஜன்.

இவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வுக்குப் பின் சினிமாவில் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ராமராஜனுக்கு சில தினங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதற்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ராமராஜனுக்கு சிகிச்சை பலனின்றி ராமராஜன் மரணமடைந்தார்.

அவருக்கு வயது 72 சொந்த ஊரான முதுகுளத்தூரில் ராமராஜன் உடலுக்கு இறுதி அஞ்சலி  சடங்குகள் நடந்தன மறைந்த ராமராஜனுக்கு மனைவி மற்றும் மூன்று மகன்களும் உள்ளனர்.  அவரது மறைவுக்கு தமிழக திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share:

சை. சையத் ரிஸ்வான்

July 12, 2022

Leave a Comment