திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன் ஐ.பி.எஸ்
செய்திகள்: குணசேகரன். வே
திருவள்ளூர் மாவட்டத்தில் 256 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வகிறது.அதாவது திருவள்ளூர் கிழக்கு திருவள்ளூர் மேற்கு என இரண்டு பிரிவுகளாக டாஸ்மாக் மது கடைகள் செயல்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் மேற்கில் 100 கடைகளும், திருவள்ளூர் கிழக்கில் 150 கடைகளும் செயல்பட்டு வருகிறது.இதில் திருவள்ளூர் கிழக்கில் மற்றும் 100 டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகின்றன.திருவள்ளூர் மேற்கில் 50க்கும் மேற்பட்ட பார்கள் செயல்பட்டு வருகின்றன.
லைசென்ஸ் இல்லாத பார்கள் 150க்கு மேல் செயல்பட்டு வருகிறது.இந்த மதுபான கடைகளில் 10 மணிக்கு மேல் கூடுதலாக பியர் ஒன்று 200 ரூபாய்க்கும், சாதாரண ஏழை மக்கள் கூலித் தொழிலாளர்கள் குடிக்கும் சாதாரண சரக்கின் விலை 150பதை 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.இதுதவிர திருவள்ளூர் மாவட்டத்தில் பல கடைகளில் அதாவது திருவள்ளூர் அருகே உள்ள புட்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை கடம்பத்துரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை ஊத்துக்கோட்டை திருத்தணி பெரியபாளையம் திருவேலங்காடு போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் ஹன்ஸ் ஊற வைக்கப்பட்டு அந்தத் தண்ணீரைமதுபானத்தில் கலந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக பல புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள் குடிமக்கள்.இந்த 250க்கும் மேற்பட்ட கடைகளில் முறைகேடுகள் தடுப்பதற்கு மதுவிலக்கு காவல்துறை துணை டி.எஸ்.பி செந்தில் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.இவரின் கீழ் 5 மதுவிலக்கு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
திருவள்ளூர், திருத்தணி, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, என இந்த ஐந்து யூனிட்டுகள் மாதமொன்றுக்கு டி.எஸ்.பி செந்திலுக்கு ஐந்து லட்ச ரூபாய் கப்பம் கட்டி வருகின்றனர்.குறிப்பிட்ட யூனிட்டிலிருந்து 5 ஆம் தேதிக்குள் பணம் தராத யூனிட்டின் இன்ஸ்பெக்டர் ஐயும் சப்-இன்ஸ்பெக்டர் வறுத்து எடுத்து விடுவாராம் டி.எஸ்.பி செந்தில்.இது தவிர முறைகேடாக செயல்பட்டுவரும் பார்கள் மாதம் 5 ஆயிரமும்,லைசென்ஸ் பெற்று செயல்படும் பார்கள் 1 மாதத்திற்கு 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்று டி.எஸ்.பி சொல்லி வருகிறார் .
இதன் அடிப்படையிலேயே பார் உரிமையாளர்கள் டி.எஸ்.பி செந்திலுக்கு கப்பம் கட்டி வருகின்றனர்.அது தவிர ஒரு பெண் இன்ஸ்பெக்டரை டி.எஸ்.பி. அடிக்கடி சீண்டி வருகிறாராம்.டிஎஸ்பி செந்தில் மதுவிலக்கு ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன் அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஐந்து லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று என்னை தொந்தரவு செய்து வருகிறார் என்று சாக மதுவிலக்கு காவல்துறை அதிகாரிகளிடம் கூறி வருகிறாராம் டிஎஸ்பி செந்தில்.
ஆனால் நாம் இது குறித்து விசாரித்தபோது செந்தாமரைக் கண்ணன் சிறப்பான நிர்வாகி லஞ்சத்திற்கெல்லாம் ஆசைப்படாதவர்.சந்தன கடத்தல் வீரப்பன் வழக்கில் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றி தமிழக அரசின் நன்மதிப்பைப் பெற்றவர் .செந்தில் குமார் இவரது பெயரைச் சொல்லி சக அதிகாரிகளிடம் மிரட்டி பணம் சம்பாதித்து வருகிறார். என்று சில நேர்மையான மதுவிலக்கு துறையில் பணியாற்றும் போலீசார் கூறுகிறார்கள்.
பணியாற்றும் விற்பனையாளர்கள் ஒருவர் கூட முழு நேரமாக பணியாற்றுவது இல்லை அவர்கள் கூலிக்கு ஒருவரை தினக்கூலி அடிப்படையில் வேலை செய்ய அனுமதிக்கிறார்கள் கடையின் மேற்பார்வையாளர் சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் பணமும் கடை மூடும் போது இரண்டு பீர் ஆப் சரக்கு கொடுத்து அனுப்பும் பழக்கத்தை திருவள்ளூர் மாவட்டம் செய்து வருகிறது. ஒருவர்கூட பணியாற்றும் போது அடையாள அட்டை வைத்திருப்பதில்லை அனைத்து டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் ரவுடிகளை போடவும் கூலிக்கு கொலை செய்யும் கொலையாளிகளை போலவே குடிமகன் உங்களிடம் நடந்து கொள்வார்கள்.
இதனால் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறார்கள் டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் தண்ணீர் மற்றும் குடிநீர் பாட்டில் சதீஷ் ஒரு பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் கூடுதல் கட்டணங்களை குறித்த கொள்ள அரசு முன்வர வேண்டும் என்கிறார்கள் குடிமகன்கள்