chennireporters.com

சென்னை தெற்கு காவல் இணை ஆணையராக சிபி சக்கரவர்த்தி ஐ.பி.எஸ் பதவி ஏற்பு.

சென்னை மாநகர காவல் துறை தெற்கு இணை ஆணையராக M.R. சிபி சக்கரவர்த்தி ஐ.பி.எஸ்  அவர்கள் புதன் கிழமை அன்று பொறுப்பேற்றார்.

தமிழக அரசு போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது.  அதன் அடிப்படையில் தாம்பரம் துணை ஆணையராக இருந்த M.R. சிபி சக்கரவர்த்தி ஐபிஎஸ் அவர்கள் டிஐஜி யாக பதிவு உயர்வு பெற்று சென்னை மாநகர காவல் தெற்கு இணை ஆணையராக புதன்கிழமை அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் 2009 ஆம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.  இவர் வேதாரண்யம், குடியாத்தம், திருப்பூர் போன்ற பகுதிகளில் ஏஎஸ்பி யாக பணியாற்றினார்.

முதல் முறையாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து ஈரோடு, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில்   எஸ்பியாக சிறப்பாக பணியாற்றினார்.   திருவள்ளூரில் வங்கி ஒன்றில் நடைபெற்ற  கொள்ளையை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்து தங்க நகைகளையும் மீட்டார்.   அதனை தொடர்ந்து உயர் போலிஸ் அதிகாரிகள் இவரை பாராட்டினர்.  அதன் பிறகு சைபர் கிரைம் எஸ்பியாக பணியாற்றினார்.

 

அதன் பிறகு தாம்பரம் காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டபோது  தாம்பரம் துணை காவல் ஆணையராக  நியமிக்கப்பட்டார்.  அங்கு சிறப்பாக பணியாற்றிய  இவருக்கு பதவி உயர்வு வழங்கி சென்னை தெற்கு காவல் துறை இணை ஆணையராக  நியமிக்கபட்டார். இவர் புதன் கிழமை அன்று பதவி ஏற்றுக்கொண்டார். கொலை, கொள்ளை வழக்குகளில் அதிரடியாக விசாரிக்கும் வல்லமை படைத்தவர் சிபி சக்கரவர்த்தி என்றால் அது மிகையல்ல.

பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாக அவரை சந்தித்து மனு அளித்தால்  விசாரணை நடத்தி பொதுமக்களுக்கு தேவையான நீதிகளை வழங்குவதில் சிறப்பான அதிகாரி என்ற பெயரெடுத்தவர் சிபி சக்கரவர்த்தி ஐபிஎஸ்.

 

இதையும் படிங்க.!