chennireporters.com

தாசில்தார் கையெழுத்தை போலியாக போட்ட டுபாக்கூர் வக்கீல் ஷேசாத்திரி.

கடந்த 10ஆம் தேதி அயனாவரம் தாசில்தார் ராமு;
தன்னுடைய கையெழுத்தை போலியாக  போட்டு நிலத்தை  பத்திர பதிவு செய்துள்ளனர். அது தொடர்பாக அம்பத்தூர் (குற்றப்பிரிவு) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஷெரிப் என்பவர் என்பவர் கிராம நத்தம் புறம்போக்கு நிலத்திற்கு எப்படி பட்டா வழங்கினார்கள் என்று கேள்வி  தாசில்தார் ராமுவிடம் கேள்வி எழுப்பினார் அவர் அளித்த தகவலின் படி பத்திரப்பதிவு எண் 3607/2022. 24.5.2022 அன்று அம்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இடம் பதிவு செய்யப்பட்டுள்ளது அது தொடர்பான நகலை என்னிடம் காட்டினார்.

இது சம்பந்தமாக அந்த இடத்தின் உரிமையாளரான தேவகி, செல்லப்பா என்பவரை நேரில் அழைத்து விசாரணை செய்தேன். அந்த பத்திரங்களை ஆய்வு செய்த போது எனது அலுவலகத்தில் வழங்கப்பட்ட உண்மைத்தன்மை சான்றில் எனது கையொடுப்பம் போலியாக போடப்பட்டுள்ளது அறிந்தேன்.

பத்திரம் எங்கு பதிவு செய்யப்பட்டது  குறித்து விசாரித்த போது அம்பத்தூரில் உள்ள லட்சுமி பிரியா டைப்பிங் சென்டரின் உரிமையாளர் சுந்தரமூர்த்தி என்பவர் தான் அனைத்து ஆவணங்களையும் தயார் தயாரித்து பத்திர பதிவு செய்தார் என்று என்னிடம் கூறினார்கள் மேலும் சுந்தரமூர்த்தியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது மேற்படி ஆவணங்களை அவர் தான் தட்டச்சு செய்தார் என்று கூறினார் மேற்படி பத்திரத்தை வழக்கறிஞர் சேஷாத்ரி மற்றும் அவரது கூட்டாளிகள் தான் என்னிடம் கொடுத்தார்கள் என்று கூறினார்.

போலீ டுபாக்கூர் வக்கீல் ஷேசாத்ரி.

ஆகவே இது சம்பந்தமாக பல நபர்கள் தொடர் முயற்சியால் குற்றங்களை இடைத்திருப்பது தெரியவந்துள்ளது என் கையெழுத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது கிராம நத்தம் புறம்போக்கு நிலத்தினை குன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த தேவகி செல்லப்பா சுந்தரமூர்த்தி மற்றும் சேஷாத்ரி ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மனுவின் மீது குற்றப்பிரிவு எண் 703/2022 சட்டப்பிரிவு465,466,467,468,470,420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது மேற்படி சேஷாத்திரி அவர் சட்டம் படிக்காமல் அந்தப் பகுதியில் பொது மக்களையும் போலீசாரையும் ஏமாற்றி வருகிறார் அவர் போலி வழக்கறிஞர் என்று தற்போது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது ஆனால் இதுவரை அந்த போலி வழக்கறிஞரை அம்பத்தூர் போலீசாரும் வில்லிவாக்கம் போலீசாரம் கைது செய்யவில்லை காரணம் தெரியவில்லை.

இந்த போலி டுபாக்கூர் வக்கீல் சேஷாத்ரி மீது வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பாலாஜி தெற்கு மாட வீதி வில்லிவாக்கம் என்பவர் ஏற்கனவே புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் மீதும் போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

வில்லிவாக்கம் பகுதியில் பல இடங்களில் போலியான ஆவணங்களை தயாரித்து சேஷாத்ரி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது சேஷாத்ரியின் பின்னால் இருக்கும் அந்த பெரிய சீட்டிங் கூட்டத்தை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்கின்றனர் வருவாய்த்துறை ஊழியர்கள்.

 

 

தாசில்தார் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத அம்பத்தூர் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் அலமேலுவை நாம் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்க முயற்சி செய்தோம். ஆனால் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளில் பலர் போலி வழக்கறிஞர்களாக சட்டம் படிக்காமலேயே ஊரை ஏமாற்றிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது. 

இதையும் படிங்க.!