chennireporters.com

ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒளிதரும் ஆட்சி திமுக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அவரை அமைச்சர் செந்தில் பாலாஜி, வெள்ளக்கோயில் சாமிநாதன்,  கயல்விழி செல்வராஜ், முத்துசாமி ஆகியோர் வரவேற்றனர்.

முதல்வருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக  கோவை விமான நிலையத்திலிருந்து ரேஸ் கோர்ஸ் சாலை வரை திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.

கோவை ஈச்சனாரி பகுதியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

பொள்ளாச்சி ஆசிபட்டியல் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்திருந்த இந்த கட்சி கூட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்.

 

கட்சியில் இணைந்தவர்களுக்கு  திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

திமுக ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒளி தரும் கட்சி என்றும் மக்களுக்காக திமுக எப்போதும் உழைத்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!