எப்பாடி பழனிச்சாமி, கே.பி முனுசாமி, சி.வி சண்முகம் உட்பட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கம் என மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு எழுந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை எனும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என்றும் இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் கூறி வருகிறார்கள்.
ஆனால் ஓ.பி.எஸ்ஸை காட்டிலும் எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் ஆதரவு அதிகம்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ் டெல்லி சென்றது, அவருக்கு தேனியில் காவித் துண்டு அணிவித்தது போன்றவற்றால் ஓபிஎஸ் மீது எடப்பாடி தரப்பு கடுங்கோபத்தில் இருக்கிறது.
ஓ.பி.எஸ் பொருளாளர்
இந்த நிலையில் ஓ.பி.எஸ்ஸை பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவது அல்லது அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்குவது உள்ளிட்டவை குறித்து எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
எல்லாவற்றுக்கும் மேல் நமது அம்மா நாளிதழில் இருந்து நிறுவனர் என்ற இடத்தில் ஓ.பி.எஸ் பெயர் நீக்கப்பட்டது.
ஒற்றைத் தலைமை
இதுகுறித்து கேட்டால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ் துரோகி என்றும் ஓ.பி.எஸ் துரோகத்தின் அடையாளம் என்றும் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக் குழுவை கூட்டக் கூடாது என ஓ.பி.எஸ் தரப்பு சொல்கிறது. கூட்டியே தீர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சொல்கிறது.
போட்டி போஸ்டர்
ஓ.பி.எஸ் புகைப்படத்தை எடப்பாடி தரப்பினர் கிழித்து வருகிறார்கள். அது போல் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பினர் போராட்டம் நடத்துகிறார்கள்.
அது போல் ஓ.பி.எஸ்தான் பொதுச் செயலாளர்.
எடப்பாடி பழனிச்சாமிதான் பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு இரு தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு போஸ்டர் ஒட்டுகிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி நீக்கம்
இந்த நிலையில் மதுரையில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கம் என்றும் கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாகவும் ஓ.பி.எஸ் ஆதரவாளர் மிசா செந்திலின் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.