chennireporters.com

புத்தியை கூர்மையாக்கும் அறிவை வளர்க்கும் வெண்பூசணிக்காய்.

வெண்பூசணியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது உடல் வெப்பத்தை தடுக்கும் சிறப்பான சக்தியை உடலில் பெருக்குவதற்கும் ஒரு எளிய வழியாகும். வெள்ளைப் பூசணிக்காய் பல   மருத்துவ குணம் கொண்ட சிறந்த இயற்கை படைப்பாகும்.

நம்பமுடியாத பல்வேறு பலன்களை உள்ளடக்கியது.  வெண்பூசணிக்காய்  மருத்துவ பயன்கள் கொண்டது.  காலையில் ஒரு டம்ளர் வெண்பூசணி சாறு குடித்தால் உடலில் பெரிய அளவில் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

அதே நேரத்தில் அது உங்களுக்கு விழிப்பு நிலையையும் கொண்டு வந்து சேர்க்கும். வெண் பூசணியை தினமும் உட்கொள்வது உங்கள் அறிவு சார்ந்த திறன்களை பெரிதும் மேம்படுத்தும்.  குறிப்பாக குழந்தைகள் வெண் பூசணிக்காய் கூட்டு, வெண்பூசணிக்காய் சாறு என  எப்படி வேண்டுமானாலும் அதை சாப்பிடலாம். தொடர்ந்து குடித்தால் உங்கள் புத்திக்கூர்மையை சீராக்கி அறிவுத்திறனை உயர்த்தும்.

அந்த மாற்றத்தை தானாகவே உணரலாம். இது மிகுந்த பிராண சக்தி கொண்டது. ஒவ்வொரு நாளும் நீங்கள் காலையில் ஒரு கிளாஸ் வெண்பூசணி சாறு குடித்தால் அது புத்திசாலித்தனம் அதிசயங்களை நிகழ்த்தும் என்பதை நீங்களே உணர்வீர்கள் . உங்கள் புத்தி மிகவும் கூர்மையாக இருக்கும்.

மேலும் இது உடலமைப்பில் தூண்டுதல் இல்லாமல் சக்தியை வழங்கும்.  வெண்பூசணியை தினசரி சாப்பிட்டால்  மனித உடலில் பல  அற்புதங்களை நிகழ்த்தும்.  சிறிது வெள்ளைப்பூசணி சாற்றை உட்கொண்டால்  மூல நோய் மற்றும் மலச்சிக்கல் உடல் வெப்பத்தினால் உண்டாகும் கொப்புளங்கள் போன்ற பிரச்சினைகளை நீங்கும்.

அதிக உடல் வெப்பம் உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்தாக அமையும்.  சளி, ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாக கூடியவர்கள் வெள்ளை பூசணியில் சிறிது கவனமாக இருக்க வேண்டும்.  ஏனெனில் இது உடலமைப்பில் அதிகப்படியான குளிர்ச்சியை உருவாக்குகிறது.

அத்தகையவர்கள் எப்போதும் அதை தேன் அல்லது மிளகுடன் கலந்து குடிக்க வேண்டும்.  இதனால் குளிரூட்டும் விளைவு ஓரளவிற்கு சமநிலை ஆகும்.  வெண்பூசணி இந்திய சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த  வரப்பிரசாதம் , ஆனால் மக்கள் அதை உணவில் பயன்படுத்தாமல் அமாவாசை, கிருத்திகை, ஆயுத பூஜை போன்ற நாட்களில் திருஷ்டிக்காக வீணாக உடைத்து வீணடிக்கிறார்கள் என்பது வேதனை கலந்த உண்மை.

இதையும் படிங்க.!