முன்னாள் உள்ளாட்சித் துறை ஊழல் அமைச்சர் எஸ் பி வேலுமணி க்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் அவரது தொடர்புடைய பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
எஸ்.பி.கே கட்டுமான நிறுவன உரிமையாளர் செய்யாதுரை நமது அம்மா நாளிதழ் வெளியிட்டாளர் சந்திரசேகருக்கு தொடர்புடைய இடங்கள் என தமிழக முழுவதும் 45க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறை சோதனை நடத்தினர்.
இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அருப்புக்கோட்டையை தலையிடமாக வைத்து எஸ்.பி. கே கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் கமுதி தாலுகாவில் உள்ள கீழமுடி மன்னார் கோட்டையை சேர்ந்த செய்யாத்துரை என்பவர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
செய்யாத்துரை
அவருடைய மகன்கள் ஈஸ்வரன், நாகராஜன், பாலசுப்பிரமணியன், கருப்புசாமி ஆகியோர் நிறுவன இயக்குனர்களாக உள்ளனர்.
மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் சாலைகள் அமைத்தல் பராமரிப்பு போன்ற பணிகள் என அனைத்து ஒப்பந்த பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
வரியைஏய்ப்பு புகாரை அடுத்து அருப்புக்கோட்டையில் உள்ள தலைமை அலுவலகம் ராமநாதபுரத்தில் உள்ள உரிமையாளர் வீடு சென்னையில் நாகராஜன் வீடு போயஸ் கார்டனில் உள்ள உறவினர் தீபக் வீடு உட்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை சோதனை நடத்தினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தன் சகோதரர்கள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் உள்ளாட்சி அமைப்புகளில் விதியை மீறி ஒப்பந்தங்கள் வழங்கியதாக புகார் எழுந்தது.இதை அடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு அமலாக்க துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் வேலுமணியின் நெருங்கிய உறவினரும் அதிமுகவின் நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளருமான சந்திரசேகரனுக்கு சொந்தமான கோவை வடவள்ளி வள்ளலார் நகரில் உள்ள வீடு மற்றும் வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள ஓணாப்பாளையத்தில் உள்ள பங்களா அவரது புளியங்குளம் அலுவலகத்திலும் நேற்று காலை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் அவர் பங்குதாரராக உள்ள அவிநாசி சாலையில் உள்ள கே.சி.பி நிறுவனம் செயல் இயக்குனர் கார்த்திக்கின் காலப்பட்டி வீடு,
பி.என் புதூரில் உள்ள சந்திரசேகரின் தந்தை ராஜன் வீடு சென்னையில் ஏழு இடங்கள் என 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது எஸ்.பி.கே நிறுவனம் வரியை ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் வந்தது.அதன் அடிப்படையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது அதில் பல முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டது என்று தெரிவித்தனர்.
மேலும் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திர சேகருக்கு தொடர்புடைய 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.
இந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதில் முக்கய பல ஆவணங்கள் சிக்கியுள்ளன.
எஸ்.பி.கே நிறுவனத்தில் கடந்த 2018 ம் ஆண்டு ஜூலையில் வருமான வரி சோதனை நடந்ததது. அப்போது கணக்கில் காட்டப்படாத 180 கோடி ரூபாய் ரொக்கமும், 105 கிலோ தங்கமும் சிக்கியது.
மேலும் 15 வங்கி லாக்கர்களின் சாவிகளும் அதற்கான ஆவணங்களும் சிக்கியது. 4 ஆண்டுகள் நிறைவில் மீண்டும் வருமான வரி சோதனை நடந்துள்ளது.
நமது சென்னை ரிப்போர்ட்டர்ஸ்.காம் இணைய தளத்தில் விரைவில் வேலுமணி கைது செய்யப்படுவார் என்றும் அவருக்கு உதவிய அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று செய்தி வெளியிட்டு இருந்தோம் .
இந்த நிலையில் திடீரென்று வருமான வரித்துறை அதிகாரிகள் வேலு மணிக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடை பெற்றுள்ளது.
விரைவில் வேலுமணி கைது செய்யப்படலாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உறுதியாக சொல்லுகிறார்கள்.