chennireporters.com

இளைஞர் மரணத்திற்கு காதலி காரணமா?

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் தற்கொலைக்கு, தனியார் டிவியில் பணியாற்றும் விஜி என்ற பெண்ணே காரணம் என புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தப் பெண் பற்றி தொடர்ச்சியாக  முகநூலில் பல செய்திகளை பதிவிட்டு வருகிறார் கவிஞர் தாமரை. ஆடம்பர வாழ்க்கைக்காக பலரது குடும்பத்தைச் சிதைத்திருக்கிறார் விஜி எனக் குற்றம்சாட்டியுள்ளார் தாமரை.

கோவையில், தன்னை விட ஏழு வயது குறைந்த, மணமாகாத ஓர் அப்பாவி இளைஞனை ஏமாற்றித் திருமணம் செய்து, அச்சுறுத்தி, தற்கொலை செய்து கொள்ள வைத்துவிட்டார் விஜி என்கிற விஜயலட்சுமி என பகீர் கிளப்பி உள்ளார் கவிஞர் தாமரை. இது தொடர்பான புகாரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், மீண்டும் இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கவிஞர் தாமரை, இன்பாக்ஸ் அரட்டையில் தனக்குத் தோதான ஆளைத் தேர்ந்தெடுத்து ‘அடுத்தடுத்த செயல்’களில் வீழ்த்தி தன்னை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்வது, அதையே பிணையாக வைத்து தனக்கு வேண்டியதெல்லாம் பெற்றுக் கொள்வது, சட்டி காலியானவுடன் கழற்றி விடுவது, இதுதான் விஜியின் வேலை என விமர்சித்துள்ளார் தாமரை.

 

சிவா தற்கொலையை தூசு தட்டும் போலீஸ் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா என்கிற ரத்தினசீலன், கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். சிவா குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்டதாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. சிவாவின் தற்கொலைக்கு காரணம் அவரது மனைவி விஜி தான் என வீடியோ ஆடியோ ஆதாரங்களுடன் சிவாவின் பெற்றோர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து இந்த வழக்கை தூசு தட்ட ஆரம்பித்துள்ளது காவல்துறை.

43 ஆடியோக்கள் ஏற்கனவே திருமணமான விஜி  முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக சிவாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அவரை மனரீதியாக துன்புறுத்தி தற்கொலைக்கு தள்ளி இருப்பதாகவும் அந்த புகாரில், சிவாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும் சிவாவின் தற்கொலைக்கு காரணம் விஜியும், அவரது குடும்பத்தினரும், அவரது தோழிகளுமே என ஆடியோவில் தெரிவித்து இருப்பதாகவும் புகாரில் கூறியுள்ளனர். இதுதொடர்பாக 43 ஆடியோக்களையும் சிவாவின் பெற்றோர் கோவை மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

கவிஞர் தாமரை ஏற்கனவே இந்த விஜி என்கிற விஜயலட்சுமியால் தனது குடும்பம் பாதிக்கப்பட்டதாக கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான தாமரை தெரிவித்துள்ளார்.

தாமரையின் கணவர் தியாகுவிற்கும் , விஜயலட்சுமிக்கும் ஏற்பட்ட தொடர்பு காரணமாக தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும், இந்த விஜி என்கிற விஜயலட்சுமி குறித்து கவிஞர் தாமரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். கவிஞர் தாமரையின் ஃபேஸ்புக் பதிவால் பெரும் கவனம் பெற்றுள்ளது இந்தச் சம்பவம். சிவாவின் பெற்றோர் அளித்த புகாரையும், அதில் இணைத்து கொடுக்கப்பட்டுள்ள ஆடியோக்களையும் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கவிஞர் தாமரை மீண்டும் விஜி பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் 30 வயது மகனை இழந்து கதறிக் கொண்டிருக்கும் குடும்பம். அவனோடு சேர்ந்து நாங்களும் சாகிறோம் என்று துணியும் பெற்றோர்.

நீங்களும் போய்விட்டால் எனக்கு வேறு யார் என்று அழுது, அவர்களைப் பாதுகாக்க முனையும் மணமான தங்கை வீடே சவக்காடாக இருக்கிறது. விஜிக்கு இது ஒன்றும் புதிய காட்சியில்லை. எந்த வீட்டில் அடியெடுத்து வைத்தாலும் அந்த வீட்டில் ஒரு பூகம்பமாவது வெடிக்காமல் போகாது.

ஆடம்பரமாக வாழ எதையாவது சாக்கு வைத்து ஒவ்வொரு வீட்டிலும் நுழைவாள். நாட்கணக்கில் ‘டேரா’ போடுவாள், நிலைமையை கணிப்பாள், என்ன செய்தால் தனக்கு லாபம் என்று பார்ப்பாள், அடைந்துவிட்டு போய்க் கொண்டேயிருப்பாள்.

அவள் முதுகுக்குப்பின் கேட்கும் ஓலத்தைப் பற்றி அவளுக்கு என்ன கவலை? ஏராளமாகப் பணம் வேண்டும், ஆடம்பரமாக வாழ வேண்டும், விலையுயர்ந்த உடைகள், அணிகலன்கள் ,பொருட்கள் வேண்டும், கார் வேண்டும், பெரிய வீடு வேண்டும், விமானப் பயணம் வேண்டும், வெளிநாடு பார்க்க வேண்டும், நட்சத்திர விடுதி வேண்டும்.

10ம் வகுப்புக்கூட தாண்டாத விஜயலட்சுமி இதற்கெல்லாம் ஆசைப்படக் கூடாது என்றில்லை. தராளமாக ஆசைப்படலாம் ஆனால் கேட்கக் கூடாது. பல ஆண்டுகளாக இதையேதான் செய்து வந்திருக்கிறாள். ஊரார் வீட்டு ஆண்களை உருட்டி வாயில் போட்டுக் கொண்டு அடைய நினைத்திருக்கக் கூடாது. பல ஆண்டுகளாக இதையேதான் செய்து வந்திருக்கிறாள். இன்று அநியாயமாக ஓர் உயிர் பலியான பிறகு தான் செய்தி வெளிவந்திருக்கிறது.

 

சட்டி காலியானவுடன் கழற்றி விடுவது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் விதவிதமாகத் தன் படத்தை வெளியிடுவது, கவிதை வரிகளைப் பரப்புவது, தான் ஒரு பூலோக தேவதை எட்டாக்கனி என்கிற எண்ணத்தைத் தோற்றுவிப்பது, இன்பாக்ஸ் அரட்டையில் தனக்குத் தோதான ஆளைத் தேர்ந்தெடுத்து அடுத்தடுத்த செயல்களில் வீழ்த்தி தன்னை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்வது, அதையே பிணையாக வைத்து தனக்கு வேண்டியதெல்லாம் பெற்றுக் கொள்வது, சட்டி காலியானவுடன் கழற்றி விடுவது. சிக்கல் ஏற்பட்டால் ‘மீடியா’ செல்வாக்கு, அரசியல்வாதிகள் நட்பைக் காட்டி மிரட்டுவது.

இது இவளது வழக்கமானன செயல்வரிசை தூண்டில்களில் சிக்கி ஒரே நேரத்தில் பல ஆண்களை நிர்வகித்து வந்திருக்கிறாள். அதிலெல்லாம் கைதேர்ந்தவள்.  இங்கே ஊடக, பத்திரிகை, இயக்க வட்டாரங்களில் இவளது ஆட்டம் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.

யாரைக் கேட்டாலும் இரண்டு புதுக்கதை சொல்கிறார்கள். மலைப்பாக இருக்கிறது. இளைஞர்கள், இளம் பெண்கள் இதுபோன்ற தூண்டில்களில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காகவே இந்தப் பதிவு அதற்காகவே ஓர் இளைஞன் உயிரை விட்டிருக்கிறான் என்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விஜியின் நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

ஈரோடு மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட விஜியை பதினாறு வயதில் அவரது பெற்றோர் ஒரு விதியை விட 20 வயது அதிகம் உள்ள ஒரு இளைஞரை திருமணம் செய்து வைக்கின்றனர்.அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இருப்பினும் சில காலம் அந்தப் பகுதியில் தனது கணவருடன் வாழ்ந்த விஜி தனது இரண்டு பெண் குழந்தைகளை விட்டுவிட்டு தன்னந்தனி ஆளாக சென்னைக்கு பிழைப்பு தேடி வந்து விட்டார்.

அவருக்கு கடந்த ஆண்டு மிகப்பெரிய வயிற்று வலி பிரச்சனை இருந்து வந்ததாகவும் அதனால் பெரும் மன உளைச்சலில் இருந்ததாக சொல்லுகிறார்கள் அவரது நண்பர்கள். அது தவிர தற்போது இதய நோய் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்கிறார்கள்.

கவிஞர் தாமரை சொல்வதை போல விஜி ஒரு மோசமான பெண்ணாக இருந்தாலும் கூட அதை ஏன் இவர் ஊரெல்லாம் தண்டோரா போட்டு சொல்கிறார் காரணம் என்ன? காரணம் தியாகு மீது இவருக்கு இருக்கும் அளப்பரிய காதலும் தன்னை ஏமாற்றி விட்டார் என்கிற கோபமும் இன்னும் தாமரை மனதில் இருந்து அகலவில்லை என்கின்றனர்.

வேறொரு பெண்ணின் கணவரான தியாகுவை தாமரை எப்படி திருமணம் செய்து கொண்டார்.அந்த வலி தியாகுவின் முதல் மனைவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இருக்காதா என்கிறார்கள். விஜியின் நண்பர்கள் இந்த விஷயத்தில் விதியின் கணவராக இருந்து இறந்து போன இ ளைஞனின் ஆடியோ குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பயிரலாகி வருகிறது.

போலீசார் விஜியிடமும் விசாரித்து அந்த இளைஞனின் குடும்பத்தாரிடமும் விசாரித்து உண்மையை சொன்னால் தான் இந்த தற்கொலை மரணத்தின்ஆப்போது தான் உண்மையான காரணங்கள் என்ன என்று தெரியவரும் மர்மங்கள் விலகும்.

இதுகுறித்து கவிஞர் தாமரையிடமும் விஜியிடமும் அவர்களது கருத்தை அறிய நாம் இருவரையும் தொடர்பு கொண்டோம் முடியவில்லை.

அவர்கள் இருவரும் தனது கருத்தை தெரிவித்தால் நாம் அதை வெளிட தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!