Chennai Reporters

’யகோபாவின் சாட்சி’ கடவுளுக்கு மட்டும் மரியாதை! தேசிய கொடி ஏற்ற முடியாது! அதிர வைத்த தலைமை ஆசிரியை!

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தருமபுரி அருகே சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்ற மறுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் சம்பவம் அப்பகுதியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகேவுள்ள பேடர அள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்செல்வி என்பவர் தேசியக்கொடியினை ஏற்ற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அதே பள்ளியில் பணிபுரியும் முருகன் என்ற ஆசிரியரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இது குறித்து சம்மந்தபட்ட தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது தான், யகோபாவின் சாட்சி என்ற கிருஸ்த்துவ அமைப்பின் ஒரு பகுதியை சார்ந்தவர் என்றும், தாங்கள் தங்களின் கடவுளை மட்டுமே வணங்குவோம், தங்களது வணக்கமும் தங்கள் தெய்வத்திற்கு மட்டுமே என கூறியுள்ளார்.

மேலும் தேசியக்கொடிக்கு மரியாதை தருகிறோம், குறிப்பாக தேசியக்கொடியை அவமதிக்கவில்லை, இந்த பள்ளியில் நான்கு ஆண்டுகளாக பணிபுரிவதாகவும், நான்கு ஆண்டுகளுமே தான் தேசியக்கொடியை ஏற்றவில்லை பள்ளியிலுள்ள மற்ற ஆசிரியர்களால் தேசியக்கொடி ஏற்றபட்டது என தெரிவித்திருக்கிறார்.

அரசு பள்ளியின் தலைமை ஆசரியை ஒருவர் சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றபடாத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!