chennireporters.com

துரோகிகளை ஜெயலலிதாவின் ஆத்மா மன்னிக்காது. அதிமுகவின் உண்மை தொண்டர்கள் குமுறல்.

எடப்பாடி மற்றும் ஓ பன்னீர் செல்வத்திற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டார் . இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தீர்மானங்கள் பின்வருமாறு.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள். 

1. அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்..

2. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்..

3. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொது செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்..

4. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்..

5.  அதிமுகவின் இடைக்கால பொது செயலாளரை நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல்..

6.  அதிமுக பொது செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்வது..

7.  அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்..

8.  மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல் பட்ட அதிமுக அரசின் வரலாற்று வெற்றிகளும்.

9.  அதிமுக அரசின் மக்கள் நலதிட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம்…

10.  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம்.

11. சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.

12. மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியிறுத்தல்.

13. இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.

14. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல்.

15. நெசவாளர் துயர் துடைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.

16. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்புணர்ச்சியோடு அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு பிறகு கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக ஒருங்கிணைப்பாளரும் அதிமுகவின் பொருளாளருமான ஓ. பன்னீர்செல்வத்தை நீக்குவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து பின்னர் தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றிய போது எடப்பாடி பழனிச்சாமி யார் என்று இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டப்படவில்லை.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கட்சியை ஆட்சியையும் வழிநடத்திச் சென்ற ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தர்மயுத்தம் நடத்தி கட்சியை தன் கையில் வைத்துக்கொண்டார்.

அதன் பிறகு சசிகலா காலில் விழுந்து பதவியைப் பிடித்த எடப்பாடி பழனிச்சாமி பின்னாளில் சசிகலாவின் முதுகில் குத்தி சசிகலா யார் ? நான் படிப்படியாக என் உழைப்பால் முன்னுக்கு வந்தேன் என்று ஒரு பச்சை பொய்யை சொல்லி பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

ஜெயக்குமார் செய்த கலகத்தால் பிஜேபியின் கைக்கூலியாக செயல்பட்டு எடப்பாடி பழனிச்சாமி இரட்டை தலைமை வேண்டாம் என்று போர் கொடி தூக்கி ஓபிசை ஓரம்கட்டி தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு வந்துள்ளார் .

ஜெயலலிதா இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் இவர்கள் குனிந்த முதுகோடு தான் இருந்திருப்பார்கள் . பேசுவதற்கு கூட அஞ்சி நடுங்கி இருப்பார்கள் என்கிறார்கள்.

ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் ஆனால் தற்போது ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் அரசியல் வரலாறு தெரியாதவன் எல்லாம் இந்த நாட்டின் முதலமைச்சர் பதவியை உட்கார்ந்துவிட்டு நாட்டை கொள்ளையடித்து சுடுகடக்கி சென்று விட்டார்கள்.

இவர்களை ஜெயலலிதாவின் ஆத்மா ஒருபோதும் மன்னிக்காது என்கிறார். ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் அதிமுக தற்போது எடப்பாடி கைக்கு போனதற்கு காரணம் உண்மையான விசுவாசத்தோடு போகவில்லை கட்சி பொறுப்பாளர்கள் எடப்பாடி பணம் கொடுத்து அவர்களை வாங்கியிருக்கிறார்.

உண்மை ஒருநாள் ஜெயிக்கும் என்கிறார் டிடிவி தினகரன் எடப்பாடி குறுக்கு வழியில் உள்ளே நுழைந்த சகுனி சகுனியின் முகத்திரை கிழியும் என்கிறார்கள்.

எம்ஜிஆரின் விசுவாச தொண்டர்கள் எப்படி இருந்தாலும் சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சரான எடப்பாடி ஜெயலலிதாவின் ஆத்மாவும் சசிகலாவும் மன்னிக்காது. என்கிறார்கள் உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள்.

இந்த நிலையில் தன்னை நீக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கேபி முனுசாமி நீக்குவதாக அறிவித்தார்.  அதிமுகவில் நடக்கும் இரு கோஷ்டி பிரச்சனைகள் தமிழகத்தில் அதிமுகவின் நிலையை சந்தி சிரிக்க வைத்திருக்கிறது.

இதையும் படிங்க.!