chennireporters.com

தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசி மிரட்டிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க பத்திரிகையாளர்கள் சங்கம் வேண்டுகோள்.

வரலாற்று சிறப்புமிக்கதமிழக சட்டமன்றநூற்றாண்டுவிழாவில் “தாகத்தால் செத்தால் சாவுங்கள்”: கரும் புள்ளி வைத்த பேரவை அதிகாரி முதல்வர் நடவடிக்கை எடுக்க டி.யூ.ஜே.கோரிக்கை.

சென்னை, ஆக.3-இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்ற, முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் முழு உருவ திரு உருவ படம் திறப்பு மற்றும் சட்டப்பேரவையின் நூற்றாண்டு தொடக்க விழாவும் மிக சிறப்பாக நடந்து நிகழ்வில், பத்திரிகையாளர்களை அவமரியாதைசெய்து ஒரு கரும் புள்ளியை ஏற்படுத்தி உள்ளார்.

சட்டப்பேரவை சார்பு செயலாளார். இந்த சம்பவம் குறித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு,உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (டியூஜே) கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா நேற்று (ஆக. 2 அன்று) மிக சிறப்பான முறையில்நடைப்பெற்றது.இந்த விழாவில்,சிறப்பு விருந்தினராக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று நூற்றாண்டு,நிகழ்வுகளை துவக்கி வைத்தும், தமிழக,முன்னாள்
முதல்வர்கலைஞர் மு.கருணாநிதி அவர்களினின் உருவப்படத்தை திறந்து வைத்து, புகழுரை வழங்கி,நூற்றாண்டு நிகழ்வுகளைதுவக்கி வைத்தார்.

இந்தநிகழ்வில், தமிழக கவர்னர் புரோகிகித்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,பேரவை தலைவர், அப்பாவு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்,எம்.பிக்கள், தமிழக அரசியல் கட்சிதலைவர்கள், தமிழக அரசின் உயர்அதிகாரிகள் உள்ளிட்டோர்பங்கேற்று, விழாவை சிறப்பித்தனர்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில், செய்தி சேகரிக்கச் சென்று, தலைமைச் செயலகத்தில் காத்திருந்த, பத்திரிகை மற்றும் ஊடக வியலாளர்களை, அங்கிருந்து கலைவாணர் அரங்கத்திற்கு வரவழித்து.

பின்னர், மீண்டும், தலைமைச் செயலகத்திற்கே அழைத்து வந்து, சட்டப்பேரவைக்குள் நிகழ்ச்சி தொடங்கும், 3 மணி நேரத்துக்கு முன்னரே (பாதுகாப்பு காரணம் காட்டி) அடைத்துவைத்து விட்டனர்.

இவ்வளவு ஏற்பாடுகள்செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தவித்த வாய்க்குதண்ணீர்அளிக்க
எந்த ஏற்பாடுகளையும்,செய்யவில்லை.

3 மணி நேரமாக பத்திரிகையாளர்கள் தாகத்தில் தவித்த போது,அங்கு வந்த, பேரவைசார்பு செயலாளார் “பாலசீனிவாசன்” என்பவரிடம், 20 ஆண்டுகளாக தலைமைச் செயலகம் மற்றும் சட்டப் பேரவை செய்தி சேகரிக்கும், மூத்த செய்தியாளர், 3 மணி நேரமாக தாகத்தில் தவிக்கிறோம். குடிக்க தண்ணீர் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். “பாதுகாப்பு காரணம் கருதி தண்ணீர் தர முடியாது எனக் கூறியுள்ளார்.”

அதற்கு அந்த செய்தியாளர்”எங்களுக்கு “தாகத்தில் ஏதாவது ஆனால் என்ன செய்வது?’என கேட்டதற்கு,”செத்தால் சாவுங்கள்” என கோபமாக, ஆணவமாக   கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

சார்பு செயலாளரின் இந்த ஆணவ பதிலால் செய்தியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட போலீசார்அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில்,அங்கிருந்த பெண் போலீஸ்அதிகாரி ஒருவர் தன் உபயோகத்திற்கு
தனியே அறையில் வைத்திருந்த தண்ணீரை கொடுத்து செதியாளரின்
தாகம்தீர்த்துள்ளார்.

இந்த சம்பவத்தைஉடனே வெளியில்சொன்னால்,”வரலாற்று” முக்கியம்வாய்ந்த நிகழ்வு
சர்சையாக மாறகூடாது” என கருதி காலதாமதமாக தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியாளர். இந்தசம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் மிக,மிக அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பற்றி இன்று காலையில் தகவல் அறிந்தவுடன், சபாநாயகர் உதவியாளர், செய்தித்துறை அமைச்சரின் உதவியாளர், செய்தித்துறை இயக்குனர், கூடுதல் இயக்குனர் ஆகியோரிடம் பேசி இந்த சம்பவம் குறித்து நடவடிக்கைக்கு எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.

அவர்களும், நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள். பத்திரிகையாளர்கள் நீண்டநாள்கோரிக்கைகளைதேர்தல் வாக்குறுதிகளாக அளித்து, அதை ஒவ்வொன்றாக
நிறைவேறிவரும் தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும்அவப்பெயர்
ஏற்படுத்தும் .

இது போன்ற அதிகாரிகள் மீது, முதல்வர் நேரடியாக தலையிட்டு,உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.யூ.ஜே. கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த
அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

இது தவிர அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கமும் பால் சீனிவாசன் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பால சீனிவாசன் தமிழ்நாட்டில் இன்னும் அதிமுக ஆட்சி நடப்பாதாக நினைத்து கொண்டு இருக்கிறார்.

இவர் அதிமுக மன நிலை கொண்ட அதிகாரி என்று தலைமை செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றன ர்.

இதையும் படிங்க.!