chennireporters.com

மைதானத்திலேயே உயிரிழந்த கபடி வீரர் சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள். 

 மைதானத்திலேயே உயிரிழந்த கபடி வீரர் சோகத்தில் மூழ்கிய கிராம  மக்கள். 

கடலூர்  மாவட்டம் பண்ருட்டி அடுத்த  புறங்கணி  என்ற கிராமத்தில் உள்ளூர் கபடி போட்டி நேற்று இரவு நடை பெற்றது.  இந்த போட்டியில் விமல்ராஜ்(22) என்ற இளைஞன்  கபடி விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென சுருண்டு விழுந்தார்.

சுருண்டு விழுந்த விமல்ராஜை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  விமல்ராஜ் சேலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல்  படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சய் (எ) விமல்ராஜ் (22) கபடி விளையாட்டு வீரர்,  இவர் சேலம் தனியார்கல்லூரியில் படித்து வருகிறார்.

சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வரும் இவர் நேற்று இரவு பண்ருட்டியை அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடினார்.  அப்போது எதிர்பாராத விதமாக கீழேவிழுந்தார்.

கீழே விழுந்ததும்,  கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுயநினைவில்லாமல் கிடந்தவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலேயே அவர் பரிதாமாக உயிர் இழந்தார். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் முழ்கியுள்ளது.

இதையும் படிங்க.!