chennireporters.com

ஓ.பி.எஸ்.வண்டி பஞ்சர். தண்ணீர் பாட்டில் தாக்குதல் சலசலப்புடன் முடிந்த அதிமுக பொதுக்குழு. தனி மெஜாரிட்டியில் எடப்பாடி.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் பொதுக்குழுவில்  கொண்டு வரப்பட்ட 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன.

ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முடியாது.   அதிமுக பொதுக்குழு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது மண்டபத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மண்டபத்தை நோக்கி அதிமுக நிர்வாகிகள் சாரைசாரையாக நின்றிருந்தனர். பொதுக்குழுவில் கலந்து கொள்ள உறுப்பினர் அட்டை ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே மண்டபம் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.  ,ஜெயலலிதா போன்று வேடமணிந்து நிர்வாகிகள் நின்றுகொண்டிருந்தனர் சண்டை மேளம், தாரை தப்பட்டை, நாட்டுப்புற கலைஞர்கள், நடனம், குதிரைவண்டி என பெரிய வரவேற்பு வாணவேடிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.

முதலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மண்டபத்திற்கு வந்தார் அரை மணி நேரம் கழித்து எடப்பாடி பழனிசாமி மண்டபத்திற்கு வந்தார்.

காலை 6 மணி முதலே தொண்டர்கள் அதிக அளவில் பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு வர தொடங்கினர்.   கூட்டம் தொடங்கிய உடன் தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஐ அவமரியாதையாக பேசத் தொடங்கினர்.   அவர் மீது வாட்டர் பாட்டில் வீசத் தொடங்கினர். அவருடைய வாகனத்தை சிலர பஞ்சராக்கிவிட்டனர்.

பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று சி.வி சண்முகம் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து வைத்தியலிங்கம்  பொதுக்குழுவிற்கு கண்டனம் தெரிவித்து மேடையிலிருந்து கீழே இறங்கினார். அவருடன் ஓபிஎஸ் மேடையை விட்டு கீழே இறங்கினார்.  அடுத்த பொதுக்குழு வரும் 11ஆம் தேதி ஒரு  நடைபெறும் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி இ.பி.எஸ் யையும்  ஒ.பி.எஸ் யையும் தனித்தனியாக சந்தித்து பேசினார் .

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமையும் வேண்டாம் இரட்டை தலைமையும் வேண்டாம் ஓபிஎஸ் ,இபிஎஸ் வேண்டாம் சின்னம்மா மட்டும் போதுமென்று கோஷம் எழுப்பி வருகின்றனர்.

அதிமுகவின் நிலை திரிசங்காக இருக்கிறது.  அதிமுகவின் எதிர்காலம் என்ன என்பதை டெல்லி பாஜக மேலிடம் தான் முடிவு செய்யும் என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.

ஆனால் காலில் விழுந்து பதவியை பெற்ற எடப்பாடியையும் சாதாரணமாக இருந்த ஓபிஎஸை முதல்வராக்கிய சசிகலாவின் முதுகில் குத்தியவர்களை ஜெயலலிதாவின் ஆத்மா மன்னிக்காது என்கிறார்கள் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள்.

இதையும் படிங்க.!