chennireporters.com

தமிழ் கடவுள் நெல்லை கண்ணன் மறைவுக்கு கவிஞர் பழனி பாரதி இரங்கல்.

தமிழ்க்கடல்
நெல்லை கண்ணன் மறைவு
பேரிழப்பு… பெருந்துயரம்.
தந்தையும் மகனுமான
தமிழுறவு எங்களுடையது.

சென்னையில் நிகழ்ந்த பொழிவுகள் பலவற்றில் முன்வரிசையில் அமர்ந்து அவரைக் கேட்டிருக்கிறேன்.

           நெல்லை_கண்ணன்.

ஒரு நாள் “வெள்ளந்தி என்ற சொல் எப்படி வந்தது தெரியுமா?” என்றார்.
கள்ளங்கபடமற்ற வெகுளி என்பதைக் கடந்து அந்தச் சொல்குறித்து எதுவும் எனக்குத் தெரியாது என்றேன்.

“வெள்ளத்தையும் தீயையும் போன்றவர் என்பதைக் குறிக்கத்தான் அந்தச் சொல் உண்டானது. வெள்ளமும் நெருப்பும் நல்லது கெட்டது என்ற எந்த வேறுபாடும் அறியாது. எல்லாவற்றையும் அவை அழித்துவிடும்; எரித்து விடும். அப்படி நல்லது கெட்டது அறியத் தெரியாத – வெள்ளமும் தீயையும் போன்றவர்களைத்தான் வெள்ளந்தி என்கிறார்கள்” என்றார்.

” கேட்டார்ப்பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்பமொழிவதாம் சொல்”
என்கிற வள்ளுவக் குறளின் குரல் அவருடையது.

கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், ஆண்டாள், சங்க இலக்கியங்களின்
வரிகளில்… வரிகளுக்கு இடையில் வாசித்தவரல்ல… வசித்தவர்
அய்யா #நெல்லை_கண்ணன்.

போய் வா தமிழே!
போய் வா!

இதையும் படிங்க.!