chennireporters.com

அறிஞர் அன்பு பொன்னோவியம் அவர்களின் நினைவு தினம் இன்று.

பிற தலைவர்களுக்கும், இயக்கங்களுக்கும் ஷெட்யூல்டு இன மக்கள் தங்கள் நேரத்தை கொடுத்து, பொருளைக் கொடுத்து, உழைப்பைக் கொடுத்து, உயிரையும் கொடுத்து கைமாறாக பெற்றது என்ன?
எல்லா துறைகளிலும் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்க செய்தார்களா? கொடுமைகளிலிருந்து பாதுகாத்தார்களா? சாதி-மத பிரச்சினைகளை ஒழித்து விட்டார்களா?
தீண்டாமையை நீக்கினார்களா.?

கனிவான பார்வை, இனிமையான பேச்சு, இசைவான வாக்குறுதி, மயக்கமான அரசியல், தற்காலிகப் பதவி இவைகளெல்லாம் தாழ்த்தப்பட்ட நிலையை உயர்த்திட உதவியதா.?

பொய்யான வாக்குறுதிகளிலும், பிரச்சாரங்களாலும் நமது மக்களை அலைக்கழிக்க பிற அரசியல் கட்சிகளில் கையாட்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்நியரை அழைத்து அறிவுரை கேட்காதே; முட்டாள் காக்கை நரியிடத்தில் ஏமாந்ததைப் போல ஏமாற்றப்படுவாய் என்றும் நமது தலைவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக இது உண்மையாகி வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம். பாபாசாகேப் சொன்னார்: மகாத்மாக்கள் பலர் வந்தார்கள், போனார்கள் எங்கள் நிலை அப்படியேதான் இருக்கிறது என்று கூறியதைப் போல பல தலைவர்கள் வந்தார்கள்; போனார்கள். எங்கள் நிலை அப்படியேதான் இருக்கிறது என்று நாமும் அண்ணல் பாணியில் கூற வேண்டியிருக்கிறது. காலமெல்லாம் பிறருக்கு அடங்கியும் அடிமைப்பட்டும் ஏன் கிடக்க வேண்டும்? இந்த நிலை அண்ணல் காலத்திலிருந்து இன்றுவரை நீடிக்கிறது. இதை தவிர்க்க நமக்கு தேவை ஒரு தலைமை! வேண்டும் ஒரே அமைப்பு!

– அறிஞர் அன்பு பொன்னோவியம்
( அறவுரை – பிப்ரவரி – 1994 )

அறிஞர் அன்பு பொன்னோவியம் அவர்களின் நினைவு தினம் இன்று!

இதையும் படிங்க.!