chennireporters.com

ஒரு மாதத்தில் பத்து லட்சம் ரூபாய் கல்லா கட்டிய சிண்டிகேட் தலைவர் தலைமை சர்வேயர் அறிவழகனின் ஊழல்.

ஆவடி தாலுக்காவில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.  அதாவது திருமுல்லைவாயல் ,முத்தாபுதுப்பேட்டை,  மிட்னமல்லி, சேக்காடு, கோவில்பதாகை, விளிஞ்சியம்பாக்கம், பருத்திப்பட்டு, பாலேரிப்பட்டு, தண்டுரை, வீராபுரம்  அகிய பகுதிகள் உள்ளன.

இதில் திருமுல்லைவாயல் , பூம்பொழில் நகர், கோவில் பதாகை, மோரை ,வீராபுரம், பட்டாபிராம், காமராஜ் நகர் ஆகிய பகுதிகள் விஐபி பகுதிகளாக விளங்குகிறது. இந்த பகுதிகளில் பல அடுக்குமாடி குடியிருப்புகளும் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் சொகுசு பங்களாக்களும் கட்டி வருகின்றனர்.  இந்த பகுதிகளில் போலி பட்டாக்களும் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளும் இருக்கின்றன. அதாவது டபுள் டாக்குமென்ட்கள் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் மேற்படி பகுதிகளில் போலி பட்டா தயார் செய்யும் புரோக்கர்கள் அதிகரித்து வருகின்றனர். அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள், பட்டா இல்லாத பகுதிகள், ஏரி, குட்டை, குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு பட்டா வழங்க இந்த புரோக்கர்கள் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில்  உள்ள தலைமை சர்வேயராக  பணியாற்றிவரும்  பாடிய நல்லூரைச் சேர்ந்த அறிவழகனை தொடர்பு கொண்டு ஐடியா கேட்பார்கள்.

இவர் பணம் அதிகம் தரும் புரோக்கர்களுக்கு ஏற்ற மாதிரி ஐடியாவும்  சொல்வர் வேலை முடித்து கொடுத்து கட்டிங்கும் வாங்குவார்.  இவர் ஆவடி தாலுகா ஆபீசில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.

ஆவடி சுற்றியுள்ள பகுதிகளில் வரைமுறை செய்யப்படாத லேஅவுட்டுகளுக்கு பட்டா  வழங்குவதற்கு அனைத்து விதமான வேலைகளை இவரே  செய்து கொடுத்து இவரே பட்டா வழங்க தாசில்தாருக்கு பரிந்துரை செய்வார் .

குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை திருமுல்லைவாயில் பகுதிகளில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட  பட்டா வழங்க பரிந்துரை செய்துள்ளார்.

அதில் பேப்பர் ஒன்றுக்கு பத்தாயிரம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை கிம்பளமாக வாங்கியிருக்கிறார்.  ஏறக்குறைய ஜூலை மாதத்தில் மட்டும் 10 லட்சம் ரூபாய் அளவிற்கு கல்லா கட்டியிருக்கிறார் சிண்டிகேட் தலைவர் அறிவழகன்.

அறிவழகனின் பிரதான புரோக்கரான சர்வேயர் பாலமுருகன் இவர் தான் அறிவழகனின் அனைத்து வரவு செலவு கணக்குகளை பார்த்து கட்டிங் கணக்குகளை சரியாக தருபவர்.  அறிவழகன் தினமும் வீட்டிலிருந்து காரில் வந்து ஒரு இடத்தில் காரை நிறுத்தி வைத்துவிட்டு  மோட்டார் சைக்கிளில் தாலுகா ஆபிசுக்கு வருவார்.
பழைய ஏ.டி. சர்வே மலையாளி ராமசந்திரனுக்கு மாதம் 5 லட்சம் வரை மேல் வருமானத்தை வசூல் செய்து தருவார் சின்டிகேட் தலைவர் அறிவழகன்.

இந்த அறிவழகனால் தான் ஆவடி தாலுகா ஆபீஸில் நிறைய புரோக்கர்கள் உருவானதற்கு காரணம் என்கிறார்கள் அலுவலக ஊழியர்கள் சிலர். அறிவழகன் பாடி நல்லூரில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டி இருக்கிறார் அது தவிர தான் சம்பாதிக்கும் லஞ்சப் பணத்தில் ஜாலியாக வாழ்க்கையை கழிப்பதில் அவருக்கு நிகர் அவரே தானாம்.

இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து  தலைமை சர்வேயர் அறிவழகனை நாம் தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அது தவிர குறுஞ்செய்தியும் அனுப்பி இருந்தோம். வாட்ஸ் அப்பிலும் தொடர்பு கொண்டோம் அவரது விளக்கம் அறிய நாம் பலமுறை முயன்றோம் . அவர் எந்த கருத்தையும் நமக்கு அளிக்கவில்லை. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதைப் போல இருக்கிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தலைமை சர்வேயர் அறிவழகனின் சொத்து மதிப்பும் அவர் லஞ்சமாக வாங்கிய கட்டிங்  மொத்த தொகை சுமார் 4 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள் அறிவழகனின் எதிர் தரப்பினர்.   அறிவழகனின் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால் இன்னும் பல ஊழல்களும் பல மலைக்க வைக்கும் தகவல்களும் கிடைக்கும் என்கிறார்கள்.

இதையும் படிங்க.!