chennireporters.com

முதல் மதிப்பெண் எடுத்த மாணவியை பாராட்டிய பள்ளி நிர்வாகம்.

ஆவடி பருத்திப்பட்டில் வேலம்மாள் வித்யாலயா பள்ளி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மெட்ரிகுலேஷன் பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலாம் மதிப்பெண் எடுத்து சவிதா என்ற மாணவி வெற்றி பெற்றார்.

ஆவடி காந்திநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் தமிழ்ச்செல்வி தம்பதியின் மகள் ம. சவிதா 600 மதிப்பெண்களுக்கு 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடம் பிடித்தார். பள்ளியில் முதலிடம் பிடித்த சவிதாவுக்கு பள்ளி நிர்வாகம் வாழ்த்து தெரிவித்தது .

அது தவிர பெரிய பேனர் வைத்து பாராட்டு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் டாப்பர் ஆப் டாப்பர் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற சவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழைகளை வழங்கினார்.

முன்னதாக பள்ளியின் முதல்வர் சி.பி. சந்தோஷ்குமார் சவிதாவை பள்ளியின் நுழைவாயிலுக்கே வந்து வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.  பள்ளியின் சார்பில் சவிதாவிற்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசும் வழங்கப்பட்டது.

பள்ளியில் மாணவர்களிடம் பேசிய சவிதா என்னைப்போல கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று பேசினார்.

மேலும் ஒரு பெண் வெற்றி பெற வேண்டும் என்றால் தாய் தந்தையின் உழைப்பும் ஆதரவும் இல்லாமல் இந்த வெற்றி எனக்கு கிடைத்திருக்காது என்று அவர் பேசி முடித்ததும் பள்ளி முழுவதும் கர ஒலி அடங்க சில நிமிடங்கள் ஆனது.

இதையும் படிங்க.!