chennireporters.com

பள்ளி மாணவனின் உயிரைக் காப்பாற்றிய தேனி கலெக்டர்.

பாம்பு கடித்த பள்ளி மாணவனின் உயிரைக் காப்பாற்றிய தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பற்றிய செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது அவருக்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தேனி 8.11.2022 இரவு சுமார் 8.00 மணி அளவில் பங்களா மேடு அருகில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவன் விக்னேஷ்வரன்.

 

குன்னூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் முடி வெட்டுவதற்காக கடைக்கு சென்றார். அதன் பின்னர் ஆஸ்டலுக்கு திரும்பும் வழியில் சாலையில் மாணவனை பாம்பு கடித்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இச்செய்தியை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் அவர்கள் உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று மருத்துவர்களை அணுகி மாணவனுக்கு அவசரகால உயிர் பாதுகாப்பு சிகிச்சை (Emargency Life Saving Treatment)அளிக்கும்படி உத்தரவிட்டார்.

மாணவன் இயல்பு நிலைக்கு திரும்பிய உடன் மாணவனை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவனுக்கு ஆறுதல் சொல்லி, முழு உடல் தகுதி பெற்ற பின்பு விடுதிக்கு செல்ல டாக்டர்கள் அனுமதி அளித்தனர்.

மாணவனுக்கு தேவையான எந்த உதவியும் அரசு செய்து தர தயாராக இருப்பதாக அவசர காலங்களில் தன்னை தொடர்புகொள்ளுமாறு கூறி ஆறுதல் வழங்கினார். தற்பொழுது மாணவர் நலமுடன் இருக்கிறார். ஆட்சியர் முரளிதரனின் இந்த செயலுக்கு வருவாய் துறை அதிகாரிகள் தரப்பிலும் பொதுமக்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க.!