chennireporters.com

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம் இன்று.

இந்திய விடுதலை போராட்ட தியாகி “வீரமுரசு” திரு. சுப்பிரமணிய சிவா அவர்கள் நினைவு தினம் இன்று.

விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான சுப்பிரமணிய சிவா 1884ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் பிறந்தார்.

திருவனந்தபுரத்தில் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். ஆங்கில அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைக் கனலை மூட்டினார்.

ஞானபானு’ என்ற மாத இதழைத் தொடங்கினார். பிறகு ‘பிரபஞ்சமித்திரன்’ என்ற வார இதழைத் தொடங்கினார். அதில் நாரதர் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார்.

மோட்ச சாதனை ரகசியம், அருள்மொழிகள், வேதாந்த ரகஸ்யம், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம் உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  இவரது கவிதைகள் பின்னர் ‘ஞானபானு’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டது.

வீரமுரசு என்று போற்றப்பட்ட சுப்பிரமணிய சிவா உடல்நிலை பாதிக்கப்பட்டு 41வது வயதில் 1925ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மறைந்தார்.

இதையும் படிங்க.!