தூத்துக்குடி கலவரம் அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் பழ. நெடுமாறன் கோரிக்கை.

August 20, 2022

By தே. ராதிகா

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.  நெடுமாறன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் தனது அறிக்கையை தமிழக அரசிடம் அளித்துள்ளது.

போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் குறிபார்த்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் காவல் துறை அதிகாரிகள் உட்பட பலர் மீது ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் என்பது ஆணைய அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.

ஆணையத்தினால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவர் மீதும் கொலை வழக்கு தொடரப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று பழ.நெடுமாறன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Share:

தே. ராதிகா

August 20, 2022

Leave a Comment