chennireporters.com

உதயகுமாருக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கண்டன போஸ்டர் மதுரையில் பரபரப்பு.

ஒ.பி.எஸ். ஐ அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு எதிராக அ.தி.மு.க நிர்வாகிகளால் திருமங்கலம் நகர் முழுவதும் போஸ்டர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியின் முன்னாள் அமைச்சரும்., தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் உதயகுமாருக்கு எதிராக அதிமுக நிர்வாகிகளால் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அ.இ.அ.தி.மு.கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் கழகப் பொருளாளர் ஒ.பி.எஸ் அவர்களை அவதூறாக பேசிய உதயகுமாரே.! நாவை அடக்கு..!

ஒருங்கினைப்பாளரை அவதூறாக பேசியதற்கு வன்மையாக கண்டிக்கிறோம் என்ற வசனங்கள் பொருந்திய போஸ்டர்கள் திருமங்கலம் தொகுதியில் சட்டமன்ற அலுவலகம் எதிரில் மற்றும் பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க கிளை நிர்வாகிகள் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ளது.

திருமங்கலம் தொகுதியில் பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக இருப்பதால் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான உதயகுமாருக்கு தொடர்ந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஓ.பி.எஸ்ஐ எதிர்த்து பேசிய உதயகுமாருக்கு மதுரை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் கண்டனம் ஏந்துள்ளது.

இதையும் படிங்க.!