வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் வெற்றி முனையில் வேல் முருகன்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் சங்கத் தேர்தல் வரும் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர்தலில் ஏற்கனவே பதவி வகித்து வந்த மோகன கிருஷ்ணன் போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து பால் கனகராஜ் போட்டியிடுகிறார்.
இவர்கள் இரண்டு பேருக்கு தான் நேரடி போட்டி என்று இருந்த நிலையில் திடீரென முந்தி வருகிறார் வேல்முருகன் என்கிறார்கள் வழக்கறிஞர்கள் சிலர்.
வழக்கறிஞர்கள் சிலர் பால் கனகராஜ் மற்றும் மோகன கிருஷ்ணனும் கடந்த 17 ஆண்டுகளாக மாறி மாறி இரண்டு பேரும் வழக்கறிஞர்கள் சங்கத்தில் தலைவராக பதவி வகித்து வருகின்றனர். அதாவது பால்கனகராஜ் மூன்று முறையும், தற்போதைய தலைவர் மோகன கிருஷ்ணன் நான்கு முறையும் தலைவராக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் புதிய மாற்றத்தை விரும்பும் இளம் வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் இருவருக்கும் மாற்றாக இருந்த வேல்முருகனை ஆதரிக்கிறார்கள் என்கிறார்கள் நடு நிலமையான வழக்கறிஞர்கள்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் புதியதாக ஒருவர் வந்தால் வழக்கறிஞர்களின் நலன் பாதுகாக்கப்படும், அவர்களுக்கான புதிய சேம நலன்களை உருவாக்கலாம் என்கிறார்கள்.
ஏறக்குறைய பதினைந்தாயிரம் வாக்காளர்கள் கொண்ட இந்த சங்கத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக இருந்து வந்தனர். அவர்கள் துணையுடன் தான் இரண்டு தரப்பும் வெற்றி பெற்று வந்தனர்.
இந்த முறை சென்னையில் மட்டும் வழக்கறிஞர்களாக பணியாற்றும் வழக்கறிஞர்கள் மட்டுமே உறுப்பினர்களாக வேண்டும் என்று விதி வகுக்கப்பட்டு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனவே இந்த முறை வழக்கறிஞர்கள் புதிய மாற்றத்தை அதாவது இருவருக்கும் மாற்றாக ஒருவரை சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
எனவே மாற்றத்திற்கான முகமாக இருக்கும் வேல்முருகன் தற்போது முந்தி முதல் நிலைக்கு முன்னேறி வருகிறார். அதாவது தற்போதைய நிலவரப்படி மோகன கிருஷ்ணன் மற்றும் வேல்முருகனுக்கு தான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது என்கின்றனர் சில வழக்கறிஞர்கள்.
ஷாப்ட் பிளேயர் என்று சொல்லப்பட்ட வேல் முருகன் தனது அதிரடி ஆட்டத்தை அடித்து தொடங்கி வெற்றியின் முதல் நிலைக்கு முந்தி வருகிறார் வேல்முருகன் என்கிறார்கள்.
தனது தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ள வேல் முருகன் வெற்றியின் விளிம்பில் நிற்கிறார் என்றே சொல்லலாம்.