அதிமுகவில் இபிஎஸ்ஸின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து ஜெயலலிதா நினைவிடத்தில் ஒபிஎஸ் மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து அவர், “தொண்டர்களின் இயக்கத்தை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் அது நடக்காது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்திருக்கிறோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை வழிநடத்துவேன்” என கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் பதவி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஓபிஎஸ் வீட்டின் முன்பு தொண்டர்கள் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்; இனிப்பு வழங்கினார்.
அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தர்மத்தை நம்பினேன்; மாட்சிமை மிக்க நீதிமன்றங்களை நம்பினேன்; கழகத்தை உயிராக நேசிக்கும் கழக கண்மணிகளை தொண்டர்களை நம்பினேன்; உண்மையும் தர்மமும் என் பக்கங்கள் தான் இருக்கிறது என்பதை உளமாற நம்பிய தமிழ்நாட்டு மக்களை நம்பினேன்;
இவையாவிற்கும் மேலாக தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்தே வளர்த்தெடுத்து பாதுகாத்து தங்களது ஆயுளை அர்ப்பணித்து இயக்கத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோரது ஆசிகளை நம்பினேன்; இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாக இருக்கிறது.
அடுத்தவர் வீட்டை மட்டும் அல்ல ;அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும் தர்மமும் தொண்டர்களும் பொதுமக்களும் குறிப்பாக தெய்வமும் ஏற்றுக் கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்திருக்கிறது.
கழக நிறுவனர் புரட்சித்தலைவர் அவர்கள் வகுத்தடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பதை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இனி கழகத்தின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு அசைக்க முடியாத எக்குக்கோட்டையாக அதிமுக திகழும் வெற்றி நடை போடும் என்பது’ திண்ணம் .
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே ‘என்னும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திருமந்திரத்தை இதயபூர்வமாக ஏற்று கழகத்தில் நிரந்தர பொதுச் செயலாளர் என்றைக்கும் நம் இதய தெய்வம் ஜெயலலிதா அவர்கள் தான் எனும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்து செல்வேன்.
கழகத்தின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும் இவ்வாறு அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் எடப்பாடியின் அரசியல் வாழ்வு இனிமேல் கேள்விக்குறி தான் என்று பன்னீர் செல்லத்தின் ஆதரவாளர்களும் அதிமுகவின் உண்மை தொண்டர்களும் கூறி வருகின்றனர்.
அதிமுக அலுவலகத்தின் சாவியை சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி இடம் ஒப்படைத்து இருக்கிறது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது அதிலும் பன்னீர் செல்வத்திற்கு சாதமாக அமையும் என்கிறார்கள் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள்.