chennireporters.com

பிளாக் லிஸ்டில் உள்ள இடத்தை பல லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பத்திர பதிவு செய்த ஆவடி மற்றும் திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலர்கள் மல்லிகேஸ்வரி, சுமதி கைதாவார்களா?

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மோரை பகுதியில் நீதிமன்ற தடையில் உள்ள அதாவது லாக் செய்யப்பட்டுள்ள இடத்தை  திருவள்ளூர் பத்திர பதிவாளர் சுமதி  லஞ்சம் பெற்றுக்கோண்டு அரசு விதிமுறைகளுக்கு மாறாக பத்திர பதிவு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அவர் கைது செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் பத்திரப்பதிவு துறை  அலுவலக ஊழியர்கள்.

என்ன நடந்தது என்பது குறித்து மோரை கிராமத்திற்கு நேரில் சென்று  விசாரித்தோம்.  மோரை பாலாஜி நகர் பகுதியில் பல இடங்கள் பிளாக் லிஸ்டில் இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.  அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வே எண்களை குறிப்பிட்டு மேற்படி இடத்தை ஆவடி பத்திரப்பதிவாளர் பதிவு செய்யக்கூடாது என்று அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டது.

மேற்படி அந்த இடங்களை பதிவு செய்ய வேண்டுமானால் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தடையில்லா சான்று வழங்கிய பிறகு தான் மேற்கண்ட  இடங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு உள்ளது.

இந்த நிலையில் ஆவடி அடுத்த மோரை பகுதியில் உள்ள பாலாஜி நகர் என்ற லேஅவுட்டில் 26 பிளாட்டுகளை அதன் மதிப்பு 1,93,31,905 கிட்ட தட்ட  இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை  பல லட்சம்  ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு  திருவள்ளூர்  பத்திரப்பதிவாளர் சுமதி அரசின் உத்தரவை மீறி பிளாக் லிஸ்டில் உள்ள இடங்களை பத்திரப்பதிவு செய்துள்ளார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதே போல  மீதியுள்ள இடத்தை  எஸ்.ரவிக்குமார் ஆர்.சுனில் குமாருக்கு செட்டில் மெண்ட் செய்துள்ளார்.  இந்த செட்டில் மெண்ட் பத்திரத்தை  மல்லிகேஸ்வரி  லஞ்சம் வாங்கிக்கொண்டு  ஆவடியில் பத்திர பதிவு செய்துள்ளார்.  அரசின் விதிமுறைகளை மீறி திட்டமிட்டே சுமதியும் , மல்லிகேஸ்வரியிம் லாபம் அடைந்துள்ளனர்.

சர்வே எண் 507/79, 507/80 டாக்குமெண்ட் நம்பர் 17501/2021. பிளாட் நம்பர் 36, 37, 38,38,40,44,45, 46, 47 ,48 ,49 ,50, 51, முதல் 26 பிளாட்டுகள் இதுபோல இன்னும் பல இடங்களை உரிமையாளர் தில்லைநாதன் பிரகாஷ் ஆகியோர் ரவிக்குமாருக்கும்
அதேபோல் தில்லைநாதன் பிரகாஷ் லாரன்ஸ் என்பவருக்கும் சாதுராக் என்பவருக்கும் விற்றுள்ளனர்.  மேற்படி பத்திர பதிவு திருவள்ளூர் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.

மீதமுள்ள செட்டில் மெண்ட்  செய்யப்பட்ட இடம் தொடர்பான பத்திர பதிவு ஆவடியில் பதிவு செய்யப்பட்டது.  

மேலும் லாரன்ஸ் என்பவர் பால லக்ஷ்மி சீதாராமன் என்பவருக்கும் ,சாதுராக் என்பவர் டி.எலியா என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர்.

இப்படி பல்வேறு முறைகேடுகள் இந்த தடை செய்யப்பட்ட பாலாஜி நகரில் நடந்துள்ளது. பிளாக் லிஸ்டில் உள்ள  இடங்கள் குறித்து ஆவடி பத்திரப்பதிவு அலுவலரிடம் பதிவேடு இருக்கிறது .

பிளாக் லிஸ்டில் உள்ள இடம் இது என்று தெரிந்தும் பத்திரப்பதிவாளர்கள் சுமதியும்,  மல்லிகேஸ்வரியும் பல லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு மேற்கண்ட இடங்களை பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே இதே ஆவடி மோரை பகுதி சேர்ந்த  இந்த  இடத்தை திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ததற்கு தான் திருவள்ளூர் பத்திரப்பதிவாளர்  சுமதி கடந்த மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

 

பணி நீக்கம் செய்யப்பட்ட  சுமதி

ஆனால் அந்த இடம் தொடர்பாக தடையில்லா சான்றும் உண்மைத்தன்மை குறித்து ஒரு சான்று ஆவடி பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரி வழங்க வேண்டும் ஆனால் மல்லிகேஸ்வரி பணம் வாங்கிக்கொண்டு பொய்யாக ஒரு சான்று வழங்கியுள்ளார் என்கிறார்கள் ஆவண எழுத்தர்கள் சிலர்.  அந்த இடம் மல்லிகேஸ்வரி ஒப்புதலுடன் தான்  திருவள்ளூரில் பதிவாளர் சுமதி பத்திரப்பதிவு செய்ததாக  கூறப்படுகிறது.

அந்த வழக்கில் மல்லிகேஸ்வரி மீது பத்திரப்பதிவு தலைவர் ஐ ஜி சிவன் அருள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கனவே பல முறை   மல்லிகேஸ்வரி முறையான  ஆவணங்கள் இல்லாத பல இடத்தை   பத்திரப்பதிவு செய்துள்ளது  குறித்து மல்லிகேஸ்வரி மீது பல புகார்  நிலுவையில் உள்ளது.

எனவே இந்த வழக்கில் மல்லிகேஸ்வரி தப்ப முடியாது கண்டிப்பாக அவர் மீது நடவடிக்கை  பாயும் என்கிறார்கள் அதிகாரிகள்.   மூன்று லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் மாவட்ட பதிவாளர் கல்பனா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அது தவிற  ஹரே கிருஷ்ணா ட்ரஸ்டுக்கு சொந்தமான இடத்தை  முறையான ஆவணம் இல்லாமல் பதிவு செய்துள்ளார்  என்ற குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது .  இதில் எதாவது ஒரு புகாரில்  மல்லிகேஸ்வரி மீது கைது நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள்.  ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் .

பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரி பிரச்சினைக்குரிய இடங்களை பத்திரப்பதிவு செய்ததற்கு ஆவணம் தயார் செய்து கொடுத்த சில ஆவண எழுத்தர்கள் மல்லிகேஸ்வரிக்கு எதிராக தற்போது  போர்கொடி தூக்கி இருக்கிறார்களாம் காரணம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் பத்திரப்பதிவு செய்தீர்கள் அதற்கு நீங்கள் தான் பொறுப்பாவீர்கள் நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்று கையை விரித்து விட்டார்களாம் சில ஆவண எழுத்தர்கள்.

இதையும் படிங்க.!