திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமை இயல் மற்றும் குற்றவியல் நடுவர் மன்ற நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்றது இந்த தேர்தலில் தலைவர் இணைச்செயலாளர் பதவிகளை தவிர பிற பதவிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது.
இந்த சூழலில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் இணை செயலாளர் தேர்தலில் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் சம்பத் போட்டியிட்டார் அவர் எதிர்த்து வேலு என்பவர் போட்டியிட்டார்.
இணை செயலாளர் பதவிக்கு வழக்குறிஞர் பூங்குளம் சரண்ராஜ் வழக்கறிஞர் சங்கர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் மொத்தம் 110 வாக்குகள் பதிவாகின. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சம்பத் 68 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சங்கத் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதேபோல இணை செயலாளராக போட்டியிட்ட பூங்குளம் சரண்ராஜ் 60 வாக்குகள் பெற்று இணை செயலாளராக வெற்றி பெற்றார்.
கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்கத்தின் இணை செயலாளராக வெற்றி பெற்ற சரண்ராஜிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சரண்ராஜிக்கு பொதுமக்கள் அரசியல் கட்சிகள் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த தேர்தலில் செயலாளராக ஏ.எம்.சேகர் பொருளாளராக மணி வர்மா துணைத்தலைவராக கண்ணன் நூலகராக வெங்கடேசன் செயற்குழு உறுப்பினர்களாக ரோஸ் குமார், ராமச்சந்திரன், சங்கர், செங்கொடி, லோகநாதன், சரவணன், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் அதிகாரிகளாக என்.எஸ் பழனிராஜ் எஸ் முத்துக்குமரன்,
சி.ஆனந்தராஜ் எம் புருஷோத்தமன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினர்.