தமிழ்நாடு முழுவதும் வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்னரும் காலி செய்யாமல் எத்தனை டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன என்ற விவரங்களுடன் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அறிக்கையுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடையை வாடகைக்கு விட்ட உரிமையாளர் மீது போலியான வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக புகார் சென்ற நிலையில் இந்த உத்தரவு டாஸ்மாக் நிர்வாகத்தை அதிரவைத்துள்ளது. tasmac rent செந்தில் பாலாஜி மூவ்! இன்று முதல் டிஜிட்டல் முறை மது விற்பனை.. டாஸ்மாக் கடைகளில் பெரிய மாற்றம்! “செந்தில் பாலாஜி மூவ்! இன்று முதல் டிஜிட்டல் முறை மது விற்பனை.. டாஸ்மாக் கடைகளில் பெரிய மாற்றம்! ” தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில மாதங்களாக மீண்டும் வலுவடைந்து வருகிறது.
திமுக கூட்டணியில் உள்ள விசிக மது ஒழிப்பு மாநாட்டை நடத்தியுள்ளது. இருப்பினும் சட்டவிரோத டாஸ்மாக் பார், மனமகிழ் மன்றங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் நெட்வொர்க் ஆகியவை வலுவடைந்து கொண்டே செல்கிறது. ஒருபக்கம் அரசு மதுக்கடைகளை படிப்படியாக மூடி வருகிறோம் என்று சொன்னாலும், மறுபக்கம் மது விற்பனைக்கு ஆட்சியாளர்கள் துணை போவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கான ஒப்பந்தம் முடிந்ததை சுட்டிக்காட்டிய உரிமையாளருக்கு நடந்த சம்பவத்தால் நீதிமன்றமே அதிர்ச்சியடைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ,காமன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பி.சுந்தர். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், ” நான் கிருஷ்ணகிரியில் சொந்தமாக தொழில் செய்து வருகிறேன். எங்கள் ஊரில் எனக்கு சொந்தமான 220 சதுர அடி கொண்ட கடையில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் டாஸ்மாக் செயல்படுகிறது. மாதம் ரூ.7,500 வாடகை வீதம் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.
சென்னை புறநகர் டாஸ்மாக் கடைகளில் சத்தமே இல்லாமல் வரும் மாற்றம் ” வாடகை ஒப்பந்த காலம் முடிவந்து விட்டதால், கடையை காலி செய்து தரும்படி கேட்டேன். இதுகுறித்து பல முறை டாஸ்மாக் மேலாளருக்கு கடிதம் கொடுத்தேன். மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தேன். எந்தப் பயனும் இல்லை.
நான் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம்தேதி சூளகிரி காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் நான் நடத்தி வந்த பேக்கரி கடைக்கு என்னை தேடி வந்துள்ளார். நான் இல்லாததால், கடை ஊழியர்களை காவல்துறையினர் அடித்து உதைத்தனர். பின்னர் என்னிடம் இருந்து 5 குவாட்டர் மதுபாட்டில்கள், 10 காலி மதுபாட்டில்கள், 20 பிளாஸ்டிக் டம்ளர்கள் இருந்ததாகவும், நான் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்ததாகவும் கூறி என் மீது வழக்கு பதிவு செய்தனர்.
டாஸ்மாக் மேலாளர் தூண்டுதலின்பேரில், அவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் சூளகிரி காவல்துறை என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி பி.வேல்முருகன்.
அப்போது, “கடையை காலி செய்ய சொன்னதற்காக இப்படி ஒரு பொய் வழக்கு கடை உரிமையாளர் மீது போடப்பட்டுள்ளது.” என்று மனுதரார் தரப்பில் வாதிடப்பட்டது. டாஸ்மாக் சஸ்பெண்ட் விவகாரத்தில் இடைக்கால தடை பிறப்பிக்க முடியாது – ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு “டாஸ்மாக் சஸ்பெண்ட் விவகாரத்தில் இடைக்கால தடை பிறப்பிக்க முடியாது – ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு ” இதையடுத்து நீதிபதி, “தமிழ்நாடு முழுவதும் வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்னரும் எத்தனை கடைகளை டாஸ்மாக் நிர்வாகம் காலி செய்யாமல் தொடர்ந்து மதுக்கடைகளை நடத்தி வருகிறது? என்பது குறித்த விவர அறிக்கையுடன் வரும் திங்கட்கிழமை டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும்.” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
கடலூர் டாஸ்மாக் முன்பு ஆவேசமான குடிமகன்.. ‘இது டுபாக்கூர் சரக்கு..’ ஃபுல் போதையில் புலம்பல் அரசு டாஸ்மாக் கடைகளில் “மாற்றம்”.. தீபாவளிக்கு காலையிலேயே கிறங்கி விழுந்த சென்னை. மது விற்பனை ஜோர் தீபாவளிக்கே டஃப் கொடுத்த விஜயின் தவெக மாநாடு! டாஸ்மாக் விற்பனை படுஜோராம் ப்ரோ. எத்தனை கோடி தெரியுமா? டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா இனி நிரந்தரம்.. ஆனாலும் அடுத்த மாதமே நடக்கும் நல்ல விஷயம் தீபாவளிக்கு 3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு லீவு விட வேண்டும்..
முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக கோரிக்கை கடலூரில் குவார்ட்டர் பாட்டிலை கடகடன்னு குடித்த நபர் குறுக்கே வந்த “ஓணான்” அடுத்து நடந்ததை பாருங்க மது ஆலை பி.ஆர்.ஓ மாதிரி பேசுறார் அமைச்சர். தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகுங்க. அன்புமணி ஆவேசம்.