chennireporters.com

பத்திரிகையாளர்களை அவாமானப்படுத்தும் டாஸ்மாக் ஊழியர்கள்.

சென்னை வேளச்சேரியில் உள்ள டாஸ்மாக் கடையில் டுபாக்கூர் பத்திரிகையாளர்ஒருவர் லஞ்சம் கேட்டதால் அவரைப் பிடித்து டாஸ்மாக் கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் அடித்து உதைத்து ஆபாசமாய் பேசும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களிடம் விசாரித்தபோது பல பார் உரிமையாளர்கள் நாங்கள் பத்திரிகையாளர்களுக்கு அதாவது பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களும் மாதா, மாதம் லஞ்சம் தருவதாக சொல்லுகிறார்கள்.

அதாவது அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கள்ளச்சந்தையில் கூடுதலான விலைக்கு பிராந்தி, பீர், ரம் ஆகியவற்றை பாட்டில் ஒன்றுக்கு 50 ரூபாய் கூடுதலாக விலை வைத்து விற்கிறார்கள்.இதை எழுதக் கூடாது என்பதற்காகவே மேற்படி செய்தியாளர்களுக்கு மாமுல் வழங்குவதாக பார் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர் .

இது தவிர சில டுபாக்கூர்கள் பத்திரிகையாளர்கள் போர்வையில் மாதம் மாமுல் வாங்கி வருகின்றனர்.சில கடைகளில் பத்திரிகையாளர்கள் என்று அடையாள அட்டை காட்டினால் கூட கூடுதலான விலை வாங்கிக்கொண்டு தான் மது தருவதாகவே குற்றச்சாட்டு வைக்கிறார்கள் ஒரு சில மது பிரியர்களான ரைட்டர்களும், எழுத்துகளும்.

மாதம் ஒன்றுக்கு ஒரு டாஸ்மாக் கடையில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை சூப்பர்வைசர் விற்பனையாளர் மேலாளர் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.மாதம் ஒன்றுக்கு நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மேல் வருமானமாக கட்டுவதாக கூறப்படுகிறது.

டாஸ்மாக் கடையில் கூடுதலாக விலை விற்பவர்கள் குறித்து டோல் ஃப்ரீ எண்ணுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக நாடுமுழுவதும் 2,000 புகார்களை பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது ஆனால் இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது பதவியேற்ற அரசும் முந்தைய காலத்தில் ஆட்சியில் இருந்த அரசும் கம்ப்யூட்டர் பில் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார்கள்.ஆனால் இதுவரை அது என்ன ஆனது என்று தெரியவில்லை.

இந்த வீடியோ பதிவில் கூட டுபாக்கூர் செய்தியாளரை அடித்து தாக்கும் டாஸ்மாக் ஊழியர் அதிகாரிகளுக்கு நாங்கள் லஞ்சம் கொடுக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்லுகிறார்.

டாஸ்மாக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் சூப்பர்வைசர்களின் சொத்து மதிப்பு பல லட்ச ரூபாய் அளவிற்கு உயர்ந்து உள்ளதா உள்ளதாம் டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மாடி வீடு மற்றும் சொகுசு கார் இல்லாதவர்கள் யாரும் இல்லை என்கிறார்கள் தமிழ்நாடு மது குடிப்போர் சங்கத்தினர்.

விடியல் அரசு குடிகாரர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் இல்லை என்றால் கூடுதலாக விலை வைத்து விற்கும் கடை ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

இதையும் படிங்க.!