ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணவரம் அருகே உள்ள மேல் வீராணம் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணத்தால் வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாணாவரம் அருகே உள்ள மேல் வீராணம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததைகண்டித்தும் பாதுகாப்பான வகுப்பறைகள் இல்லாததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து பாணாவரம் காவேரிப்பாக்கம் சாலையை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பாணாவரம் காவல் துறையினர் மாணவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.மாணவர்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மாணவர்கள் அதிகம் படித்து வருகின்றனர்.ஆங்கிலம் கணிதம் போன்ற முக்கிய பாடத்திற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமை ஆசிரியர் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் .பொதுத் தேர்வு நடை பெற ஒரு மாதம் உள்ள நிலையில் மாணவர்களின் பாடத்தை இதுவரை ஆசிரியர்கள் நடத்தி முடிக்கவில்லை.
போதிய ஆசிரியர்களும் இல்லை .இதனால் மாணவர்கள் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத மாணவி ஒருவர் சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வரும் ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக எங்கள் பள்ளியின் மீது கவனம் செலுத்தி புதிய ஆசிரியர்களை நியமித்து ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
இந்த அரசு விடியல் ஏழைகளுக்காக விடியல் தரும் அரசாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.