மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி சென்னை கொரட்டூரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஏழு வயதில் இருந்து 11 வயது குழந்தைகளும்,12 வயதில் இருந்து 14 வயது உள்ளவர்கள், 15 டு 17 வயது மற்றும் 18 வயதில் இருந்து 25 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற போட்டி நடைபெற்றது.
இதில் 5 கிளப்புகள் கலந்து கொண்டன.டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் யுனைடெட் டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் அகடாமி கஜேந்திரன் டேக்வாண்டோ கிளப் கொண்டன. இந்த போட்டியில் 255 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் முதல் பரிசை நாகேந்திர பாபு தலைமையிலான டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் வெற்றி பெற்றது.
விழாவில் மாவட்ட தலைவர் வேணுகோபால், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சி கோதண்டன், முதுநிலை பயிற்சியாளர் வி கோதண்டன், மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பரிசு பெற்றவர்கள் தங்களது குழுவின் மாஸ்டருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் குடும்பத்தினருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. போட்டியின் நடுவர்கள் பணியாற்றினர் அவர்களுக்கு விழா குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளூர் டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் கிளப்பில் 215 பேர் பங்கேற்றனர். இதில் 93 பேர் பரிசுகளை பெற்றனர். அதில் 32 பேர் தங்க பதக்கமும் 27 பேர் சில்வர் பதக்கமும் 34 பேர் வென்களப் பதக்கமும் பெற்றனர்.