தமிழக முதல்வருக்கு நன்றி கடன் பட்டுள்ளோம்.

May 4, 2021

By இரா. தேவேந்திரன்.

mk.staalin

பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்.

தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் அறிவிப்புமகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை.செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அதற்காக அயராது உழைக்கின்றனர்.கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந் தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள்.செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள்.

முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும். என்று தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவருக்கு சென்னை ரிப்போர்ட்டர்ஸ் டாட் காம் இணைய தள நிர்வாகத்தின் சார்பில்நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Share:

இரா. தேவேந்திரன்.

May 4, 2021

Leave a Comment