chennireporters.com

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 171 கோடி சொத்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து முறைகேடாக பெற்ற சொத்துக்களின் விபரமும் மதிப்பும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

7 டிப்பர் லாரி, 10 டிரான்சிஸ்ட் மிக்சர், ஒரு JCP – 6.கோடியே 58லடசம்.

ஒரு BMW கார் – 53 லட்சம் மதிப்பு.

85 சவரன் நகை – 40.58 லட்சம் மதிப்பு.

காஞ்சிபுரத்தில் விவசாய நிலம் – 3.99 கோடி மதிப்பு.

சென்னை நகரிலுள்ள பாக்கிய ரதி அம்மன் சாலையில் உள்ள வீட்டின் மதிப்பு வீடு – 14.57 கோடி மதிப்புஇது போக பிற நிறுவனங்களில் முதலீடு செய்தது – 28.69 கோடி மதிப்பு.

மொத்தம் மதிப்பு ரூபாய் நூற்று எழுபத்தி ஒரு கோடியே 20 லட்சத்து 51 ஆயிரத்து 424 ரூபாய் (171,205,1424) அதாவது விஜயபாஸ்கருக்கு சொந்தமான மதர் தெரேசா பெயரில் உள்ள 14 கல்வி நிறுவனங்களின் சொத்துக்கள் இல்லாமல் 171 அளவிற்கு சொத்து சேர்த்துள்ளார்.

இது கணக்கில் காட்டப்பட்டுள்ளது.மட்டும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் இன்னும் எவ்வளவு இருக்கிறது என்பதை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தனிப்படைகள் அமைத்து விசாரித்தால் தான் தெரியவரும்.

இதையும் படிங்க.!