chennireporters.com

பள்ளி மாணவர்களுக்கு ரூ 960 கோடி வழங்கிய பீகார் அரசு.அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள்.

பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூபாய் 960 கோடி டெபாசிட் செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகப்பை உள்ளிட்டவைகள் வாங்க அரசு சார்பில் உதவி தொகை வழங்கப்படுகிறது.

இதற்காக பள்ளி மாணவர்கள் பெயரில் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் தொகை செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில் 2 பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் 960 டெபாசிட் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கதிர்கார் மாவட்டம் பகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் குரு சந்திரவிஸ்வாஸ், ஆஷிஷ் குமார் ஆகிய இரண்டு மாணவர்களின் வங்கி கணக்கில் அரசு எவ்வளவு பணம் டெபாசிட் செய்து இருக்கிறது என்று பார்க்கச் சென்றனர்.

குருசந்திர விஷ்வாஸ் வங்கி கணக்கில் ரூபாய் 60 கோடியும், ஆஷிஷ்குமார் வங்கி கணக்கில் ரூபாய் 900 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் மாணவர்களின் பெற்றோர் கடும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

மாணவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

உத்திரபீகார் கிராம வங்கியின் மேலாளர் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுக்க தடைவிதித்து உத்தரவிட்டார்.

மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும், வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதே போல பீகாரில் விவசாயி ஒருவர் வங்கி கணக்கில் 5 லட்ச ரூபாய் பணத்தை வங்கி ஊழியர்கள் தவறுதலாக அவரது கணக்கில் டெபாசிட் செய்தனர்.

பின்னர் விஷயம் தெரிந்ததும் அந்த கிராமத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட விவசாயிடம் பணத்தை திரும்பி தருமாறு வங்கி ஊழியர்கள் கேட்டனர்.

ஆனால் அவர் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் பொதுமக்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் பணம் டெபாசிட் செய்வதாக அறிவித்தார்.

அதில் முதல் தவனை தொகை 5 லட்சம் என்று நினைத்து பணத்தை எடுத்து செலவு செய்து விட்டேன் என்று தெரிவித்தார்.

இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் வங்கி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இதையும் படிங்க.!