chennireporters.com

சசிகலாவுக்கு எதிரான வருமான வரி வழக்கை கைவிட முடியாது ஒன்றிய அரசு முடிவு.

நடிகர் ரஜினிகாந்திற்கு சலுகை காட்டியதுபோல் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலாவுக்கு வருமான வரி பாக்கி தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 1994ஆம் ஆண்டு தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்குதலில் 28 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் கணக்கு காட்டியிருந்தார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அதே நிதி ஆண்டில் 80 ஏக்கர் நிலத்தை சசிகலா வாங்கியதும் அதை வருமான வரித் துறைக்கு கணக்கு காட்டாமல் மறைத்திருந்தார்.

நன்றி the hindu

அது வருமான வரித்துறை யால் கண்டுபிடிக்கப்பட்டது  இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் 94-ம் 95-ம் ஆண்டுக்கான வருமான வரியாக 48 லட்சம் ரூபாய் செலுத்தும்படி சசிகலாவிற்கு இரண்டாயிரத்து 2002ஆம் ஆண்டு வருமான வரித் துறை உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் இந்த உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான தொகை என்பதால் தனக்கு எதிரான வருமான வரித்துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு வருமான வரித்துறை தரப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான வரி செலுத்துவது தொடர்பான வழக்குகளை கைவிடுவது என்ற மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கை யானது சசிகலா வழக்கு வழக்கிற்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு நீதிபதிகள் சிவஞானம் சக்திகுமார் சுகுமார் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தபோது வருமான வரித் துறை சார்பில் வழக்கறிஞர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலாவுக்கு வருமான வரி பாக்கியை செலுத்துவது தொடர்பான வழக்குகளை கைவிடும் சுற்றறிக்கை பொருந்தாது என்று தெரிவித்தால் இதற்கு சசிகலா தரப்பில் பொருந்தும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதி நீதிபதிகள் வழக்கை தள்ளிவைத்தனர்.

ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான வருமான வரி பாக்கி செலுத்துவது தொடர்பான வழக்குகளை கைவிடும் முடிவின் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை வருமானவரித்துறை திரும்பப் பெற்றது.

அதனடிப்படையில் இந்த வழக்கை சசிகலா தரப்பில் தொடரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது ரஜினிகாந்திற்கு சலுகை காட்டியது போல சசிகலாவுக்கும் சலுகை காட்ட வேண்டும் என்று சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.

இதையும் படிங்க.!