chennireporters.com

“டீ “கேட்ட முதல்வர் திகைத்து நின்ற கடைக்காரர்.

கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தைப்போல மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட முதலமைச்சர் நேரடியாகச் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகளை வழங்கி வருகிறார்.போர்க்கால அடிப்படையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இன்னிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் செங்கற்பட்டு மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட சென்றார்.

அப்போது வண்டி மாம்பாக்கம் அருகே சென்றபோது தனது ஓட்டுநரை டீக்கடை ஓரமாக நிறுத்துமாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.

உடனடியாக வண்டியை ஓரமாக நிறுத்திய ஓட்டுநர் எதற்காக முதலமைச்சர் வண்டியை நிறுத்தச் சொன்னார் என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.

திடீரென்று வண்டியிலிருந்து கீழே இறங்கிய முதல்வர் ஸ்டாலின் அருகிலிருந்த தேநீர் கடைக்குச் சென்று தம்பி 4 டீ போடுங்க என்று சர்வசாதாரணமாக சொல்லி அருகில் இருந்த இருக்கையில் உட்கார்ந்து இருக்கிறார்.

டீ மாஸ்டருக்கு ஒன்றும் புரியாமல் கனவா இல்லை நினைவா என்று வியந்திருக்கிறார்.

தயக்கத்துடன் ஐயா எத்தனை டீ வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.அதற்கு மீண்டும் முதலமைச்சர் நான்கு டீ போடுங்க என்று சொல்லியிருக்கிறார்.

உடனடியாக முதலமைச்சர் உடன் வந்த அதிகாரிகள் அமைச்சர்கள் முதல்வருடன் இறங்கி டீ குடித்து உள்ளனர்.அதன்பிறகு முதலமைச்சரை காண பொதுமக்கள் கூட்டம் கூடியுள்ளனர்.அருகிலிருந்த மருத்துவமனை செவிலியர்களும் முதல்வருடன் செல்பி எடுத்துள்ளனர்.

எந்தவித படபடப்பும் பரபரப்பும் இல்லாமல் தங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முதல்வர் சிரித்த முகத்துடன் சம்மதித்து செல்பி எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளார்.

முதலமைச்சர் டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்தது அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதையும் படிங்க.!