திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் இல்லாமல் கவுன்சில் கூட்டம் நடத்திய திமுக சேர்மன் தங்கமணியால் அந்த பகுதியில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கவுன்சிலர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு புகார் அனுப்பியுள்ளார்.;
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.
தமிழக முழுவதும் கோவை, காஞ்சிபுரம், திருமழிசை, திருச்சி என பல்வேறு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் திமுக மேயர்கள் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருவதால் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு அவர்களது பதவியை பறித்து வருகிறார்.
இதே போன்ற இரண்டு தினங்களுக்கு முன்பே அதிமுக கவுன்சிலர்கள் விலை போனதால் திருமழிசை பேரூராட்சியில் திமுக வெற்றி பெற்றது. இதே போல திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஊராட்சி ஒன்றியத்தில் நான்கு கவுன்சிலர்கள் மட்டுமே உள்ள சிறிய ஊராட்சி ஒன்றியம் ஆகும். இதில் மொத்தம் நான்கு கவுன்சிலர்கள் மட்டுமே உள்ளனர். தமிழ்நாட்டிலேயே சிறிய யூனியன் இது தான் என்பது குறிப்பிட தக்கது.இந்த யூனியனில் மூன்று திமுக கவுன்சிலர்களும் ஒரு காங்கிரஸ் கவுன்சிலரும் உள்ளனர். திமுக சேர்மனாக உள்ள திருமாலின் மனைவி தங்கமணி பல்வேறு ஊழல்களிலும் ஈடுபட்டு வருகிறார். அது தவிர அவரது கணவர் திருமால் அனைத்து அலுவலக விஷயங்களிலும் தலையிட்டு நிர்வாக ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை செய்து வருகிறார். அது தவிற அந்த பகுதியில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் புறம்போக்கு இடங்களில் அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது.அந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியுள்ளார். அதே போல அந்த பகுதிகளில் உள்ள சிருங்காவூர், விளாங்காடு பாக்கம், தர்காஸ் போன்ற பகுதிகளில் தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் ரியல் எஸ்டேட் அமைத்து வருகின்றனர். அவர்களிடம் நிலத்தை வரைமுறை செய்யாமல் , லே-அவுட் போடாமல் இவர் தலையிட்டு அந்த நிலங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதில் மட்டும் ஏறக்குறைய இதுவரை 70 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா மீரான் என்பவர் புகார் அளித்துள்ளார்.
சேர்மன் தங்கமணியின் உறுதி மொழி பத்திரம்.
உயர்நீதிமன்றத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் பஞ்சாயத்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திருமாலின் புரோக்கர் வீரா மற்றும் ஈஸ்வரி.
இந்த நிலையில் பல மாதங்களாக கவுன்சில் கூட்டம் நடத்தாமல் கல்லா கட்டி வந்த திமுக கவுன்சில் சேர்மன் தங்கமணி காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா மீரானுக்கு எந்தவித தகவலும் தராமல் திருட்டுத்தனமாக ஃபிராடுத்தனமாக 9ம் தேதி எந்தவித தகவலும் இல்லாமல் அறிவிப்பும் இல்லாமல் கவுன்சில் கூட்டம் நடத்தி பல தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.
எரிகிற வீட்டில் பிடுங்குவது வரை லாபம் என்ற வகையில் இருக்கிற இன்றும் மூன்று மாத காலத்தில் எவ்வளவு திருட முடியுமோ கொள்ளை அடிக்க முடியுமோ பிராடுத்தனம் செய்ய முடியுமோ அவ்வளவு விஷயங்களையும் செய்துவிடலாம் என்று திமுக சேர்மன் திட்டம் போட்டுள்ளார்.
பிடிஒ சித்ரா மற்றும் ஈஸ்வரி.
ஏற்கனவே அந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். அதில் தற்காலிக ஊழியர் ஈஸ்வரி மற்றும் தற்போதைய பிடிஓ சித்ரா மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்தவித அனுமதியும் இல்லாமல் சித்ரா ஈஸ்வரி என்ற ஃபிராடு பெண்ணை லஞ்சப் பணம் வாங்குவதற்காக மட்டுமே திமுக கவுன்சிலர் அதாவது சேர்மன் தங்கமணியின் கணவர் திருமால் வேலைக்கு வைத்துள்ளார்.
தினக்கூலி ஊழியர் ஈஸ்வரி.
மீண்டும் இரண்டு தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென்று புழல் பிடிஒ அலுவலகத்தில் சோதனை செய்து ஈஸ்வரியை தனியறையில் வைத்து ஐந்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் ஏற்கனவே இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைக்காக வைக்கப்பட்ட பணம் திமுக சேர்மன் திருமாலின் புரோக்கர் வீரா என்பதை தற்காலிக ஊழியர் ஈஸ்வரி ஒப்புக்கொண்டதாக கூறப்பட்கிறது.
அதன் அடிப்படையில் ஈஸ்வரியை உடனடியாக வேலையில் இருந்து நீக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில் பிடிஒ சித்ரா ஈஸ்வரியை வேலையை விட்டு நீக்கினார். இது தொடர்பாக கவுன்சிலர் மல்லிகா மீரன் நம்மிடம் அவரது தரப்பு விளக்கத்தை தெரிவித்தார்.
காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா மீரான்.
தி. மு. க. ஒன்றிய குழு தலைவர். தங்கமணி திருமால்
தி. மு. க. ஒன்றிய குழு துணை தலைவர்.சாந்தி பாஸ்கர் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ. சித்ரா பெர்னான்டோ ஆகியோர் இணைந்து மல்லிகா மீரான் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் முறைகேடாக அனுமதிகள் கொடுப்பதற்காக, முறையான அழைப்பு கொடுக்கப்படாமல் இன்றைய தினம் ஒன்றிய கூட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும் மல்லிகா மீரான் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் போடாத மனை பிரிவிற்கும், முறையான சாலை இல்லாத பகுதிகளில் பல்வேறு கட்டங்களுக்கு ஒன்றிய குழு தலைவர் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ. ஆகியோர் இணைந்து பல லட்சம் லஞ்சமாக பெற்று அனுமதி கொடுத்துள்ளனர். இதுகுறித்து மல்லிகா மீரான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.வழக்கு நிலுவையில் உள்ளது.
திமுக சேர்மன் தங்கமணியின் கணவர் திருமால்.
இவ்வாறு முறைகேடாக அனுமதி அளித்த ஒன்றிய குழு தலைவர் மற்றும் பி.டி.ஓ. மீது தொடர்ந்து நான் வழக்கு பதியப்படுவதால் ஒன்றிய குழு கூட்டத்தில் எனக்கு அழைப்பு கொடுக்கப்படாமல் இன்று ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
மேலும் மல்லிகா மீரான் கடைசியாக நடந்த இரு ஒன்றிய குழு கூட்டத்திலும் கையொப்பம் இடவில்லை எனவும் தெரிவித்துள்ளார், இது குறித்து மல்லிகா மீரான் கூறுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பல லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்று சட்டத்திற்கு புறம்பாக ஒன்றிய குழு தலைவர், தங்கமணி ஒன்றியக் குழு துணை தலைவர் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ. சித்ரா ஆகியோர் இணைந்து பல்வேறு கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கி உள்ளனர். அதில் பல லட்ச ரூபாய் ஊழல் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து பல்வேறு புகார்கள் நான் கொடுப்பதால் எனது உரிமையும் கடமையும் ஒன்றிய குழு தலைவரும், புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரும் பறித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பான செயல், தனி ஒரு நபரை பழிவாங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை பழிவாங்க துடிக்கும் தி.மு.க. ஒன்றிய குழு தலைவர், தி.மு.க. ஒன்றிய குழு துணை தலைவர் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய பி. டி.ஓ. மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளேன். என்று கவுன்சிலர் மல்லிகா மீரன் நம்மிடம் தெரிவித்தார்.