chennireporters.com

#dancing female khakis; ஆட்டம் போடும் பெண் காக்கிகள் மௌனம் காக்கும் உயர் பெண் அதிகாரி…

தமிழ்நாட்டில் காவல் துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள், குடும்ப பிரச்சினைகளை தீர்க்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மகத்தான திட்டம் மகளிர் காவல் நிலையம்.

ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் பெண் காக்கிகள் போடுகிற ஆட்டத்தைக் கண்டு ஆண் அதிகாரிகளே மலைத்துப் போய் நிற்கிறார்கள் என்கிறார்கள் சில நேர்மையான உளவுத்துறை காக்கிகள்.

வேலூர் மாவட்டத்தில் கணவனை இழந்த இளம் பெண்ணுடன் ஆண் ஒருவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த கள்ளக்காதல் அந்தப் பெண்ணின் இளம் வயது மகளின் வாழ்க்கையையும் சீரழித்து விட்டது.Imposed' not 'Implemented': A journey of the Sexual Harassment Law

நாளடைவில் அந்த இளம் பெண் கர்ப்பமானார். இது தொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது இன்னும் சில வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் தன்னை சீரழித்த இளைஞரை திருமணம் செய்து கொள்வதாக சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.Protection Of Women From Sexual Harassment At Workplace - PoshHelp

இதனை பெண்ணின் அம்மாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் அந்த சிறுமிக்கு தாலி கட்டி மாலை போட்டு புகைப்படம் எடுத்து நீதிமன்றத்தில் காண்பித்தால்தான் வழக்கை ரத்து செய்வார்கள் இதனால் வேலூரில் இருந்து சென்னை கோயம்பேடு வந்த அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் தனது கள்ளக்காதலனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தன்னைக் கெடுத்தது மட்டுமில்லாமல் தன் மகளையும் கெடுத்து விட்டாய். இந்த நிலையில் மீண்டும் அவளுக்கு தாலி கட்டி மாலை போட்டு போட்டோ எடுக்க அனுமதிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த இடத்தில் பணியில் இருந்த ஜானகி என்ற பெண் சப்இன்ஸ்பெக்டர் சம்பந்தப்பட்ட இளைஞரிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் அவருக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.IndustriALL sexual harassment policy | IndustriALL

புகார் கொடுக்க வந்த பெண்ணின் அம்மாவிடம் மூளை சலவை செய்து தன்னுடைய மகளின் எதிர்காலத்தை கருதி அமைதியாக இருந்து விடுங்கள் என்று நடவடிக்கை எடுக்காமல் மிரட்டும் தொணியில் பேசியுள்ளார்.

அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண் தன் மகளின் எதிர்காலத்தை கருதி புகார் கொடுக்க விரும்பாமல் தனது கள்ளக்காதலனுடன் தனது மகளை அழைத்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு சென்று விட்டனர்.

இந்த செய்தி குறித்து நமது செய்தியாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது ஜானகி லஞ்சம் வாங்குவதில் தேசிய விருது பெற்றவராக கருதப்படுவார் என்கிறார்கள் சில நேர்மையான உளவுத்துறை காக்கிகள்.

தனது காவல் நிலையத்திற்கு தொடர்பு இல்லாத திருமங்கலத்தில் உள்ள விஆர் மாலில் ஓசி பிரியாணி சாப்பிட உளவுத்துறை பெண் காவலர் ராதிகாவும் ஜானகியும் ஒன்றாக சேர்ந்து காவலர் உடையில் விஆர்மாலில் மிகச் சிறப்பான சுவையான பிரியாணி கடையில் ஓசியில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல பானிபூரி மசால் பூரி, பேல் பூரி போன்ற தின்பண்டங்களை ஓசியில் சாப்பிடுவதையும் தனது சட்டத்தின் கடமையாக வைத்துள்ளனர். இது தொடர்கான வீடியோ ஆதாரங்கள் விஆர்மாலில் உள்ள சிசிடிவி யில் அஅதிகாரிகள் ஆய்வு செய்து கொள்ளலாம்.

கோயம்பேடு காவல் நிலையத்தை ஒட்டி உள்ள ஒரு ஜூஸ் கடை நடத்தும் பெண் ஒருவரின் செல்போனில் தனது லஞ்சப் பணத்தை போடச் சொல்லி ஜானகியும், ராதிகாவும் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கேட்பதில் ஜானகி கொஞ்சம் கூட வெட்கப்பட மாட்டாராம். ஜானகிக்கு ஒத்து ஊதுவதைப் போல ராதிகாவும் பக்கவாத்தியம் வாசிப்பாராம் இருவரும் போடும் ஆட்டம் சொல்லி மாளாது என்கிறார்கள் சில ஆண் காக்கிகள்.  ஏற்கனவே பெண் விஷயத்தில் சிக்கி ய விருகம்பாக்கம் காவல் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் மீது இணை ஆணையர் திஷா மிட்டல் நிரந்தர பணி நீக்கம் செய்திருக்க வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட தரப்பினர்.

அதேபோல கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள அனைவரையும் வேறு இடத்திற்கு மாற்றி அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களின் கூகுள் பே மற்றும் குடும்பத்தினரின் google pay-வின் கணக்குகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர். வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய வி.ஏ.ஓ | Bribery to issue succession certificate: VAO caught red-handed

அதேபோல கோயம்பேட்டில் உள்ள காய்கறி கடைகள், பழக்கடைகளிலும் ஓசி தானாம் எல்லாமே ஓசி தானாம்.

ஆட்டம் போடும் பெண் காக்கிகள் மீது இணை ஆணையர் திஷா மிட்டல் நடவடிக்கை எடுப்பாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இந்த புகார் குறித்து சம்பந்தப்பட்ட பெண் சப் இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் உளவுத்துறை தலைமை காவலர் ராதிகா அவர்கள் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!