chennireporters.com

ரயிலில் மின்னல் வேகத்தில் ஓடி ஏறும் மாணவிக்கு ஐ.பி.ஸ்.ஆக வேண்டும் என ஆசை.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு மாணவர் ஒருவரும் மாணவி ஒருவர் ஓடும் ரயிலில் அபாயகரமாக ஓடிச்சென்று ரயிலில் ஏறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

கவரப்பேட்டை ரயில் நிலையத்திலிருது கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடியும் தனது கால்களை தரையில் தேய்த்தும் சக பள்ளி மாணவனுடன் சேர்ந்து பயணம் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரல் ஆனது.

கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த சம்பந்தப்பட்ட அந்த மாணவர் மற்றும் மாணவியின் பெற்றோர்களை நேரில் வரவழைத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண் குமார் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆபத்தான முறையில் பயணம் செய்வதே தவறானது.உடலில் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். பெற்றோர்களை நேரில் வரவழைத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண் குமார் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

எனவே நீங்கள் பத்திரமாக பயணம் செய்ய வேண்டும் என்று ம் அவர்களின் எதிர்கால லட்சியம் குறித்து கேட்டபோது மாணவர் தான் ஒரு டி.எஸ்.பியாக வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும் அதே போல அந்த மாணவி தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக போவதாகவும் தெரிவித்தார்.

அந்த மாணவர்கள் வருங்காலத்தில் சிறப்பாகப் படிக்க ஆலோசனைகள் வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தார் எஸ்.பி.வி.டாக்டர் வருண் குமார்.

இதையும் படிங்க.!