இந்தியாவையே திரும்பி பார்க்கப்பட்ட வழக்கு பாலியல் குற்றவாளி ஞானசேகரன் தொடர்பாக 5 பெண் அதிகாரிகள் அதிரடி காட்டி பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை [ஆயுள் தண்டனை] பெற்று கொடுத்துள்ளனர். இந்தியாவில் பாலியல் வழக்கில் பெண் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு பெற்று தந்து ஆண்களுக்கு பெண்கள் ஒரு போதும் இளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபித்துள்ளனர்.
தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் 5 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளியான ஞானசேகருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
வெற்றியை தேடித்தந்த ஐந்து பெண் அதிகாரிகள்;
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க காரணமாக ஐந்து பெண் அதிகாரிகள் உழைத்திருக்கின்றனர். மேலும் முழுக்க முழுக்க பெண்களே இந்த வழக்கை கையாண்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணும், சாட்சியம் அளித்த பெண்களும் தைரியமாக தங்களது வாக்குமூலத்தை அளித்திருக்கின்றனர்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த இளம் பெண் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பல்கலைக் கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சென்னையில் பிரியாணி கடை நடத்தி வரும் கோட்டூர்புரைத்தைச் சேர்ந்த ஞானசேகரன் அண்ணா பல்கலை வளாகத்திற்குள் அத்துமீறி சென்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை எதிர்க் கட்சிகள் கையில் எடுத்தன. இதை அடுத்து ஞானசேகரன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதனை அடுத்து சென்னை போலீஸ் இடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழுவுக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியது.
பிருந்தா ஐபிஎஸ்.
5 மாதங்களில் விசாரித்து முடிக்கப்பட்ட வழக்கு.
இந்த நிலையில் வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஐந்தே மாதங்களில் வழக்கு விசாரணை நிறைவடைந்தது. 29 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு, கடந்த மே 28ஆம் தேதி ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறிய நீதிபதி அவரை குற்றவாளி என அறிவித்தார். இதனையடுத்து நேற்று தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி 30 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை உள்ளிட்ட 11 குற்றங்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞானசேகருக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Dr. சினேகப்பிரியா ஐபிஎஸ்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இடைக்கால இடை இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 பெண்கள் முக்கிய பங்காற்றி இருக்கின்றனர். அதாவது இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவில் விசாரணை மேற்கொண்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேருமே பெண்கள் தான் சினேகப்பிரியா, பிருந்தா, ஐமான் ஜமால் ஆகியோர்தான் இந்த வழக்கை விசாரித்தவர்கள
ஐமான் ஜமால் ஐபிஎஸ் .
மேலும் அரசு தரப்பில் ஆஜரான வக்கீலும் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை சிறப்பாக கையாண்ட வழக்கறிஞரான மேரி ஜெயந்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியதும் பெண் நீதிபதியான ராஜலட்சுமி தான். அந்த வகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி பெற்று தந்ததில் 5 பெண்கள் முக்கிய பங்காற்றி இருக்கின்றனர்.
நீதிபதி ராஜலட்சுமி.
அது மட்டும் அல்லாமல் விசாரணை அமைப்பு, நீதிமன்றம், வழக்கறிஞர் என அனைவருமே பெண்களாக இருந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணும், சாட்சியம் அளித்த பெண்களும் தைரியமாக தங்களது வாக்குமூலத்தையும், சாட்சியத்தையும் அளித்ததால் தான் இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.