chennireporters.com

#sexual crimes; பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை உடந்தையாக இருந்த தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். என்ன நடந்தது? ராமநாதபுரத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியைப் பாலியல் கொடுமை செய்து வந்த கல்லூரி மாணவர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
இதையடுத்து அந்த ஆசிரியர் இச்சம்பவம் குறித்து குழந்தைகள் நலப் பாதுகாப்பு மையத்தில் புகார் செய்தார். குழந்தைகள் நலப் பாதுகாப்பு கண்காணிப்பாளர் சிறுமி பாதிக்கப்பட்டது தொடர்பாக விசாரித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அந்த சிறுமி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவை தனியார்க் கல்லூரி மாணவரான வாலாந்தரவையைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும் சிறுமியின் தாய்க்கும் தகாத உறவு இருந்துள்ளது தெரியவந்தது.

Child Abuse
மேலும் அந்த சிறுமி தனது வீட்டின் அருகில் உள்ள ஆசிரியை ஒருவரிடம் டியூசன் சென்ற போது, அந்த ஆசிரியையின் மகனும் கல்லூரி மாணவருமான பரத் என்பவரும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் விசாரணையின் போது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் தாயார், கல்லூரி மாணவர்கள் நவீன், பரத் ஆகியோர் மீது போக்சோ பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது தாய் மற்றும் கல்லூரி மாணவர்கள் நவீன், பரத் ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர்.

குழந்தைகள், சிறுமிகள் பெண்கள் என எல்லா தரப்பினரும் பள்ளி கல்லூரி பணியாற்றும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து கொண்டே வருகிறது.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது அரசு கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்கின்றனர் பெற்றோர்கள்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர் மீது இரண்டு மாதங்களில் வடக்கை விசாரித்து உடனடியாக தீர்ப்பு தந்து விட வேண்டும் அல்லது அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை வழங்க அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

எத்தகைய அரசியல் பின்புலம் விஐபி வீட்டு மகன்கள் என யாராக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் அரசு உடனடியாக அவர்கள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

எனவே தமிழக அரசு நடந்து கொண்டிருக்கும் சட்டமன்ற பேரவை தொடரில் பாலியல் வன்கொடுமை தொடர்பான புதிய சட்ட வடிவத்தை கொண்டு வர வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

இதையும் படிங்க.!