chennireporters.com

இன்று தமிழகம் முழுவதும் இந்திய குடிமையியல் பணிக்கான தேர்வு(UPSC) நடைபெற்று வருகிறது.

அந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவது தொடர்பாக தேர்வு எழுதுபவர் களுக்கான விதிமுறைகள் குறித்து தேர்வு மையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் தமிழில் மற்றும் ஆங்கிலம் எதுவும் எழுதப்படாமல் இந்தியிலேயே எழுதப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து இதுவரை எந்த தமிழ் அமைப்புகளும் தெரிவிக்கவில்லை. தமிழகம் எங்கும் சுய தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

கோவை திருப்பூர் சென்னை போன்ற தொழில் நகரங்களில் வட இந்தியர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது .

எனவே இந்தியும் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மெல்லமெல்ல திணிக்கப்பட்டு வருகிறது இந்தி என்னும் கொடிய விஷம் கொண்ட பாம்பு தமிழை விழுங்க தயாராகிக்
கொண்டிருக்கிறது.

தமிழக அரசு வட இந்தியர்களின் ஆதிக்கத்தையும் இந்தி மொழி தமிழகத்தில் அதிகாரம் பீடத்தில் உட்கார விடாமல் தமிழக அரசு விரைவில் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க.!